பாகிஸ்தானின் அந்த கனவை இந்தியா உடைச்சுட்டாங்க.. அதிக தைரியத்தையும் ஒத்துகிறேன்.. ரிஸ்வான் வருத்தமான பேட்டி

Mohammed rizwan
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை 42.3 ஓவரில் இந்தியா எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி சதத்தை அடித்து 100*, ஸ்ரேயாஸ் ஐயர் 56, சுப்மன் கில் 46 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றியால் செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மறுபுறம் நடப்புச் சாம்பியனான பாகிஸ்தான் 99% இத்தொடரிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து மீண்டும் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தங்களுடைய கனவை இந்தியா உடைத்துள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கனவு உடைந்தது:

மேலும் தங்களை விட இந்தியா தைரியத்துடன் சிறப்பாக விளையாடியதாலேயே தோல்வியை சந்தித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் எங்களுடைய கோப்பையை வெல்லும் கனவு உடைந்துள்ளது என்பதே உண்மையாகும். அடுத்தப் போட்டியில் நியூசிலாந்து தோற்குமா அல்லது இந்தியா வெல்லுமா? என்பதை வைத்து எங்களால் என்ன செய்ய முடியும்”

“எங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி கனவு தற்போது அடுத்தவர்களின் கையில் இருக்கிறது. கேப்டனாக அதை நான் விரும்பவில்லை. எங்களுடைய சொந்த வழியில் நாங்களாக ஏதாவது செய்திருந்தால் அது வித்தியாசமாக இருந்திருக்கும். நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான தோல்விகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். செமி ஃபைனல் செல்ல மற்றவர்கள் கையை நாங்கள் எதிர்பார்த்து உட்கார விரும்பவில்லை”

- Advertisement -

தைரியமான இந்தியா:

“இந்தத் தோல்வியால் நாங்கள் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளோம். ஏனெனில் அது கடினமான நாளில் வந்துள்ளது. அப்ரார் அகமது பவுலிங் நேர்மறையாக இருந்தது. ஆனால் நாங்கள் 3 வகையான துறைகளிலும் நிறையத் தவறுகளைச் செய்தோம். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் கடந்த 3 – 4 போட்டிகளில் செய்த அதே தவறுகளை நாங்கள் மீண்டும் செய்துள்ளோம்”

இதையும் படிங்க: 99இல் 89.60 ஆவெரேஜ்.. விராட் கோலி இன்னும் 3 வருசம் விளையாடி 15 செஞ்சூரி அடிக்க இதுவே போதும்.. சித்து ஆதரவு

“நாங்கள் அதில் வேலை செய்து வருகிறோம். ஆனால் அதையும் தாண்டி அசத்த முடியவில்லை. ஒருவேளை இந்தியா எங்களை விட கடினமாக உடைத்திருக்கலாம். அவர்கள் அதிக தைரியத்தையும் கொண்டுள்ளார்கள். தைரியத்தில் பின்வாங்கிய நாங்கள் களத்திலும் விழுந்தோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியை வங்கதேசம், இந்தியா தோற்கடித்தால் மட்டுமே பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு ரன்ரேட் அடிப்படையில் செல்ல குறைவான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement