அண்டர் 19 உலககோப்பை 2022 : பைனலில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு கிங் கோலி வாழ்த்து

kohli
- Advertisement -

கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களை கண்டறிய ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒரு முறை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான உலக கோப்பையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 14வது முறையாக நடைபெறும் ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கியது.

Under 19 World Cup

- Advertisement -

லீக் சுற்று, நாக்அவுட் சுற்று என இந்த உலககோப்பையில் மொத்தம் 48 போட்டிகளில் உலகின் 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்தி வருகிறார்கள். இந்த உலக கோப்பையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக விளங்கும் இந்தியா தனது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பைனலில் இந்தியா:
அதன்பின் நடந்த காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளங்கிய வங்கதேசத்தை புரட்டி எடுத்து தோற்கடித்த இந்தியா நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் வழுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 37/2 என தடுமாறி பின்னர் 50 ஓவர்களில் 290/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட கேப்டன் யாஷ் துள் 110 ரன்கள், சாய்க் ரசீத் 94 ரன்களும் விளாசினர்.

Yash Dhull

அதன்பின் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்துவீசிய இந்தியா 194 ரன்களுக்கு சுருட்டி 96 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அசத்தியது. இதையடுத்து இந்த உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு வலுவான இங்கிலாந்தை முன்னாள் சாம்பியன் இந்தியா சந்திக்க உள்ளது.

- Advertisement -

கிங் கோலி வாழ்த்து:
ஏற்கனவே கடந்த 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பைகளை வென்றுள்ள இந்தியா இந்த வருடமும் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை முத்தமிடுமா என பார்ப்பதற்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இளம் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வண்ணமாக நட்சத்திர வீரர் விராட் கோலி அவர்களை நேரடியாக வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

kohli u19

கடந்த 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. சொல்லப்போனால் அந்த உலகக் கோப்பையில் தான் விராட் கோலி எனும் மகத்தான வீரர் இந்த உலகிற்கு கண்டறியப்பட்டார். உலக கோப்பையை வென்ற காரணத்தால் 2008ஆம் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற விராட் கோலி அதன்பின் படிப்படியாக உயர்ந்து 2011 முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்தார்.

- Advertisement -

இளம் வீரர்கள் மகிழ்ச்சி:
இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்து வந்த சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது அவருக்கு நிகரான ஒருவர் கிடைப்பாரா என கலக்கம் அடையாத இந்திய ரசிகர்களே இருக்க முடியாது. ஆனாலும் சச்சினுக்கு பின் அவரின் இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி அவரைப் போலவே அபாரமாக பேட்டிங் செய்து பல ஆயிரம் ரன்களை குவித்து பல சதங்களை அடித்து நவீன கால சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ரன் மெஷினாக ஜொலித்து வருகிறார். கேப்டனாகவும் இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்றி உள்ள விராட் கோலி இந்த உலகிற்கு ஏற்கனவே தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.

Virat Kohli U19 Players

அப்படிப்பட்ட விராட் கோலி தங்களை நேராக தொடர்புகொண்டு ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவரிடம் உரையாடிய அண்டர் 19 இந்திய வீரர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக அவருடன் உரையாடியது பற்றி இந்திய ஆல் ரவுண்டர் ஹங்கர்கேகர் “உங்களுடன் உரையாடியது மிகவும் நன்றாக இருந்தது விராட் பையா ! சொந்த வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றி உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்கள் வரும் காலங்களில் உதவும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நாளைக்கு ஒருநாள் தான் இருக்கு. அதுக்குள்ள 5 ஆவது இந்திய வீரரும் அவுட் – போட்டி நடக்குமா?

அதே போல் மற்றொரு இந்திய வீரர் தாம்பே “மகத்தான ஒருவரிடமிருந்து பைனலுக்கு முன்பாக சில மதிப்புள்ள டிப்ஸ்களை பெற்றுள்ளேன்” என கூறியுள்ளார். விராட் கோலி உரையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement