நாளைக்கு ஒருநாள் தான் இருக்கு. அதுக்குள்ள 5 ஆவது இந்திய வீரரும் அவுட் – போட்டி நடக்குமா?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் பிப்ரவரி 6-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளுமே அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே நடைபெற இருக்கின்றன. நாளை மறுதினம் துவங்க இருக்கும் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ind

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் உள்ள ஏழு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 4 வீரர்களுக்கும், 3 நிர்வாகர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்து நேற்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேல்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்திய t20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ள அக்சர் பட்டேல் ஒருநாள் போட்டிகளில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் பயோ பபுள் காரணமாக அணி வீரர்களுடன் இணைந்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்படட்டதன் காரணமாக இந்திய அணியின் வீரர்களில் 5 ஆவது வீரராக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

axar 1

அதுமட்டுமின்றி ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்தடுத்து வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் முதலாவது போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது சந்தேகமாக உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsWI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர் போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு?

ஆனால் எது எப்படி இருப்பினும் போட்டிகள் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளதால் நிச்சயம் முதலாவது போட்டி எந்தவித தடையுமின்றி நடைபெறும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement