சத்தமில்லாமல் சரிவை சந்தித்து வரும் விராட் கோலி.. 15 ஆட்டங்களாக ஏற்பட்டுள்ள ஏமாற்றம் – மீண்டும் பார்முக்கு திரும்புவாரா?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் கையில் இருந்த வெற்றியை தாரை வார்த்த இந்திய அணியானது அந்த போட்டியை சமனில் முடித்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே அடித்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதன்காரணமாக இந்திய அணி இந்த தொடரில் (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் மோசமான பேட்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மாவை தவிர்த்து வேறுயெந்த பேட்ஸ்மேனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக விராட் கோலி தான் கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

டி20 உலககோப்பையின் கடைசி போட்டியில் அரைசதம் கடந்த அவர் அதனை தவிர்த்து கடைசியாக தான் விளையாடிய 15 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இலங்கை அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் நிலைத்து நின்று வெற்றியை பெற்றுத்தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க : என்ன இருந்தாலும் விராட் கோலியை விட ரோஹித் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து மீண்டும் அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement