என்ன இருந்தாலும் விராட் கோலியை விட ரோஹித் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். அதில் சீரான வேகத்தில் விளையாடும் ஸ்டைலை கொண்ட விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். மேலும் 80 சதங்கள் அடித்துள்ள அவர் 26000 ரன்கள் குவித்து சச்சின் போலவே செயல்பட்டு வருகிறார்.

மறுபுறம் ஆரம்பகாலங்களில் தடுமாறினாலும் 2013க்குப்பின் எதிரணிகளை சொல்லி அடிக்கும் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் விளாசி அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்துள்ளார். மேலும் ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் சிறந்தவர்:
இருப்பினும் நேருக்கு நேராக ஒப்பிடும் போது புள்ளிவிவரங்களின் படி ரோஹித்தை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். அத்துடன் ஒரு வீரரின் உண்மையான தரத்தையும் திறமையும் சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019 வரை சுமாராகவே செயல்பட்ட ரோஹித் சர்மா சமீபத்திய வருடங்களில் தான் அசத்தி வருகிறார். ஆனால் விராட் கோலி 2011 முதலே தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 என்ற சராசரியில் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமத் ஜாஹித் கூறியுள்ளார். அதற்கான காரணம் பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் நான் விராட் கோலியை விட ரோஹித் சர்மாவை உயர்ந்த பேட்ஸ்மேனாக மதிப்பிடுவேன்”

- Advertisement -

“தற்சமயத்தில் ரோஹித் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் தைரியம் கொண்டவர். அவர் பரிசாக கிடைத்த வீரர். அவர் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் போல லென்த்தை மிகவும் வேகமாக பிடித்து அடிக்கக் கூடியவர்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரோஹித் சர்மா தனது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கும் ஸ்டைலை பின்பற்றுகிறார்.

இதையும் படிங்க: ஒருநாள் அணியில் ஷிவம் துபே தொடர்ந்து இடம்பிடிக்க வேண்டுமெனில் நிச்சயம் இதை செய்ய வேண்டும் – விவரம் இதோ

அவருடைய தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை இந்தியா 17 வருடங்கள் கழித்து வென்றது. அதே போல நடைபெற்று வரும் இலங்கை ஒருநாள் தொடரில் சவாலான பிட்ச்சில் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் விராட் கோலி ஏமாற்றத்தை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement