இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அவர் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.
தேடி வந்த பதவியை மறுத்த விராட் கோலி :
அதோடு அவர் மீது பெரிய விமர்சனம் எழ காரணமாகவும் அமைந்தது. இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராத் கோலி முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முன்னணி வீரர்கள் பலரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் விராட் கோலி ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கிறார்.
ஆஸ்திரேலிய தொடர் முடிந்த கையோடு கழுத்து வலிக்கான ஊசியை செலுத்தி இருந்ததால் அடுத்த கட்ட ரஞ்சி சுற்றின் முதல் போட்டியில் விளையாடாத அவர் தற்போது ரயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாட தயாராகி வருகிறார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.
இதன் காரணமாக அடுத்த ரஞ்சி போட்டியில் அவர் விளையாட இருப்பது உறுதி. இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
இதையும் படிங்க : கடந்த ஆண்டு தோனியை சந்தித்த போது அவர் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – ஷஷாங்க் சிங் பேட்டி
ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.



