RCB vs MI : மும்பையை பந்தாடிய கிங் கோலி – ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக இரட்டை வரலாற்று சாதனை

Kohli
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் என்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா 1 (10), கிசான் கிசான் 10 (13), கேமரூன் கிரீன் 5 (4), சூரியகுமார் யாதவ் 15 (16) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

RCB vs MI

- Advertisement -

அதனால் 48/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை இளம் வீரர் நேஹல் வதேரா அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 21 (13) ரன்கள் எடுத்து போராடி அவுட்டாக அடுத்து வந்த டிம் டேவிட் 4, ரித்திக் ஷாகின் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய திலக் வர்மா 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்களும் அர்சத் கான் 15* (9) ரன்களும் எடுத்ததால் தப்பிய மும்பை 20 ஓவரில் 171/7 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரன் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

கிங் கோலியின் சாதனைகள்:
அதை தொடர்ந்து 172 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கி 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 73 (43) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (49) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 12* (3) ரன்களின் எடுத்ததால் 16.2 ஓவரிலேயே 172/2 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Maxwell

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டு பிளேஸிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 82* ரன்கள் விளாசிய விராட் கோலி அதையும் தாண்டி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வரும் கதைக்கு கடந்த ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்கள் விளாசி சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் சமீபத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

1. அதே ஃபார்மில் இப்போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்து அரை சதமடித்து 84* ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 50 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 50*
2. ஷிகர் தவான் : 49
3. ரோகித் சர்மா : 41
4 சுரேஷ் ரெய்னா : 40
5. கெளதம் கம்பீர் : 36

Virat Kohli vs Jofra Archer

2. அத்துடன் 2008 முதலே பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 50 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் வீரர் என்ற வேறு யாருமே படைக்காத வரலாற்று சாதனை படைத்தார். அவரை விட அதிகமாக 60 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள டேவிட் வார்னர் கூட ஹைதராபாத், டெல்லி போன்ற பல்வேறு அணிகளுக்காக தான் அடித்துள்ளார்.

- Advertisement -

3. மேலும் இந்த ஐம்பது 50+ ஸ்கோர்களில் 20 பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 20 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை படித்த முதல்வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்தார்.

Faf

4. அது போக ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக முறை அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 26*
2. ரோஹித் சர்மா : 25
3. கௌதம் கம்பீர்/சிகர் தவான் : தலா 22

இதையும் படிங்க:IPL 2023 : இதுக்கு தோனி எவ்ளவோ பரவால்ல, அவரிடம் கத்துக்கோங்க – மோசமான படைத்த ரோஹித் சர்மாவை விளாசும் ரசிகர்கள்

5. அத்துடன் 167.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த போட்டியில் அசத்திய அவர் ஐபிஎல் தொடரில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக 50+ ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 23*
2. ரோஹித் சர்மா : 22
3. எம்எஸ் தோனி/சுரேஷ் ரெய்னா : தலா 19

Advertisement