பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாபெரும் உலக சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 23-ஆம் தேதி நாளை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடி இருந்த இந்திய அணி வெற்றியையும், பாகிஸ்தான் அணி தோல்வியையும் பெற்றுள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை :

நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதனால் பாகிஸ்தான் அணி தீவிர செயல்பாட்டினை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால் இந்திய அணியும் முழு வீச்சில் தங்களது திறனை வெளிப்படுத்தும்.

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாளைய இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 298 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 286 இன்னிங்ஸ்களில் விளையாட 13 ஆயிரத்து 985 ரன்கள் அடித்துள்ளார். இதில் 50 சதம் மற்றும் 73 அரைசதம் அடங்கும். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் அவர் மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே உள்ளனர். சச்சின் தனது 350-வது இன்னிங்சில் 14,000 ரன்களையும், சங்கக்கார 378-வது இன்னிங்சில் 14,000 ரன்களை கடந்திருந்தனர்.

இதையும் படிங்க : ஐபிஎல்’ல கருணை கிடைக்காது.. 43 வயதிலும் அந்த காதலுக்காக இதை செய்றேன்.. இந்தியா தான் முக்கியம்.. தோனி பேட்டி

இவ்வேளையில் விராட் கோலி 300 இன்னிங்ஸ்களுக்கு குறைவாகவே அந்த சாதனையை நிகழ்த்த இருக்கிறார். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த சாதனையில் முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை கடந்த ஆண்டு மிஞ்சிய விராட் கோலி இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement