500வது போட்டியில் சச்சின், பாண்டிங், காலிஸ் போன்ற யாருமே செய்யாத – இரட்டை உலக சாதனைகளை படைக்கும் கிங் கோலி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டியில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைக்க உள்ளார்.

Kohli 1

- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று தோனி தலைமையில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்திய அவர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து விதமான டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இரட்டை உலக சாதனை:
குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற இந்த உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் அசத்தும் நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற சராசரியில் அசத்துவதே விராட் கோலியின் தரமாகும். மேலும் ஃபிட்னஸ் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒருநாள், 115 டி20 என 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 499* போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் (664), எம்எஸ் தோனி (538), ராகுல் டிராவிட் (509) ஆகியோருக்கு பின் 500 போட்டிகளில் விளையாடும் 4வது இந்தியர் என்ற வரலாறு படைக்க உள்ளார்.

Virat Kohli Sachin tendulkar MS Dhoni

அத்துடன் உலக அளவில் மகிளா ஜெயவர்த்தனே (652), குமார் சங்ககாரா (594), சனாத் ஜெயசூர்யா (586), ரிக்கி பாண்டிங் (560), சாகித் அப்ரிடி (524), ஜேக் காலிஸ் (519) ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேச போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற உள்ளார். அதை விட டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் முறையே 8555, 12898, 4008 என மொத்தமாக 25461* ரன்களை 53.48 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் 75 சதங்கள் 131 அரை சதங்கள் 2522 பவுண்டரிகள் 279 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

- Advertisement -

1. அப்படி 499 போட்டிகளின் முடிவில் 53.48 என்ற சராசரியை கொண்டுள்ள அவர் உலகிலேயே தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியுடன் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை படைக்க உள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், தோனி, ராகுல் டிராவிட் அல்லது உலக அரங்கில் ஜேக் காலிஸ், குமார் சங்ககாரா உட்பட 500 போட்டிகளில் விளையாடிய வேறு எந்த பேட்ஸ்மேனும் 50க்கும் மேலான பேட்டிங் சராசரியை கொண்டிருந்ததில்லை.

Sachin Virat Kohli

2. அது போக சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றுமொரு உலக சாதனையையும் விராட் கோலி படைக்க உள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 25461*
2. ரிக்கி பாண்டிங் : 24991
3. சச்சின் டெண்டுல்கர் : 24839

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக முதல் இடத்தில் விராட் கோலி வைத்திருக்கும் சாதனை பற்றி தெரியுமா? – விவரம் இதோ

இங்கு மற்றொரு விஷயம் என்னவெனில் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் உட்பட வேறு எந்த வீரரும் தங்களுடைய 500வது போட்டியில் சதமடித்ததில்லை. ஒருவேளை இந்த போட்டியில் 3 இலக்க ரன்களை தொடும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் சதமடிக்கும் முதல் வீரர் என்ற மற்றுமொரு சரித்திரம் காணாத உலக சாதனையை விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement