- Advertisement -
இந்திய கிரிக்கெட்

124 ரன்ஸ்.. சச்சின், காலிஸ், ரூட்டை முந்திய விராட் கோலி.. இந்தியாவின் வெற்றிக்கு போராடி 2 புதிய உலக சாதனை

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோற்றது. குறிப்பாக இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 137, கிளன் பிலிப்ஸ் 106 ரன்களை எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 124, ஹர்ஷித் ராணா 53, நிதிஷ் ராணா 52 ரன்கள் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை குவிக்கவில்லை. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் கிளார்க், ஜாக் போல்க்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

போராடிய உலக சாதனை:

அதனால் நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் முறையாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக இந்திய அணிக்காக முழுமூச்சுடன் போராடிய விராட் கோலி மற்றும் ராணாவின் போராட்டம் வீணானது. குறிப்பாக 4வது ஓவரிலேயே களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 45 ஓவர்கள் வரை நியூசிலாந்துக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காததால் அவருடைய 54வது ஒருநாள் சதம் இந்திய அணியின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் இதையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி 73 இன்னிங்ஸில் 10* சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

2 உலக சாதனை:

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி (இந்தியா): 10 (73 இன்னிங்ஸ்)
2. ஜோ ரூட் (இங்கிலாந்து): 9 (71 இன்னிங்ஸ்)
2. ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா): 9 (76 இன்னிங்ஸ்)
2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா): 9 (80 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: அவங்க 2 பேரை தவிர சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. வரலாறு காணாத தோல்விக்கு இதான் காரணம்.. கில் பேட்டி

அத்துடன் இப்போட்டியில் இந்தூர் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி முதல் முறையாக சதத்தை அடித்துள்ளார். இதையும் சேர்த்து உலகம் முழுவதிலும் அவர் 35 வெவ்வேறு மைதானங்களில் குறைந்தது ஒரு சதமடித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மைதானங்களில் சதமடித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி: 35*
2. சச்சின் டெண்டுல்கர்: 34
3. ரோஹித் சர்மா: 26
4. ரிக்கி பாண்டிங்/ஹாசிம் அம்லா/ ஏபி டீ வில்லியர்ஸ்: தலா 21

- Advertisement -