- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் குழந்தைகளை அவரோட கிரிக்கெட்டை பார்த்து வளர சொல்லிருக்கேன்.. இந்திய வீரரை பாராட்டிய இயன் பெல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 161 போட்டிகளில் 5416 ரன்களை குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 118 போட்டிகளில் 7727 ரன்கள் அடித்துள்ளார். மேலும் மொத்தமாக 30 சதங்கள் குவித்துள்ள அவருடைய கவர் ட்ரைவ் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.

ஏனெனில் அந்தளவுக்கு இயன் பெல் அடிக்கும் கவர் டிரைவ் டெஸ்ட் போட்டிகளில் பார்ப்பதற்கு மிகவும் கச்சிதமாகவும் அழகாகவும் இருக்கும். இந்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் கவர் ட்ரைவ் மிகவும் நன்றாக இருக்கும் என்று இயன் பெல் பாராட்டியுள்ளார். மேலும் தம்முடைய குழந்தைகளிடம் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட்டில் வளருமாறு கூறியுள்ளதாகவும் இயன் பெல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இயன் பெல் பாராட்டு:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிறந்த கவர் டிரைவ் அடிக்கும் வீரர் என்று வரும் போது விராட் கோலியை தாண்டி மற்றொருவரை பார்ப்பது மிகவும் கடினம். கவர் டிரைவ் மட்டுமின்றி விராட் கோலி விளையாடும் விதம், பேட்டிங் மீதான அவருடைய ஆசை, எதிரணிக்கு போட்டியை கொடுக்க விரும்பும் அவருடைய விருப்பம் போன்ற விஷயங்களும் நன்றாக இருக்கின்றன”

“எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் விராட் கோலி கவர் ட்ரைவ் விளையாடும் போது அதைப் பார்ப்பது நன்றாக இருக்கும். என்னுடைய குழந்தைகள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களை முடிந்தளவுக்கு நான் விராட் கோலி விளையாடுவதை பார்க்க நிச்சயம் கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி:

அந்த வகையில் இயன் பெல் பாராட்டும் அளவுக்கு விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வது இந்தியாவுக்கு பெருமையை என்றே சொல்லலாம். அத்துடன் இங்கிலாந்து கிரிக்கெட்டைப் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அடுத்த தலைமுறை வீரர்கள் நிறைய டி20 கிரிக்கெட்டை பார்த்து வளருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்தில் இளம் வீரர்கள் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர்”

இதை படிங்க: சுப்மன் கில்லை பிரின்ஸ்ன்னு சும்மா சொல்லல.. இந்தாங்க ஆதாரம்.. ஆகாஷ் சோப்ரா புள்ளிவிவர பேட்டி

“ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் இங்கிலாந்துக்காக செய்ததை அடுத்ததாக செய்யக்கூடிய நாம் வீரர்களை கண்டறிவது மிகவும் கடினம். அது ஷேன் வார்னே, கிளன் மெக்ராத் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்காக தங்களுடைய கேரியரை முடித்த போது இருந்த நிலைமையை போலவே இருக்கிறது. அடுத்து வரும் வீரர்களும் அவர்களுடைய கால் தடத்தில் அசத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. எனவே இளம் வீரர்கள் மீது மக்கள் கடினமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -