இந்தியாவுக்கு சாதகமான அம்பயர்? கோபமான ஜெயசூர்யா வாக்குவாதம்.. விராட் கோலியால் ரசிகர்கள் வேதனை

LBW Decision
- Advertisement -

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, கமிண்டு மெண்டிஸ் 40 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து அபாரமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் முதல் போட்டியை போலவே இப்போட்டியிலும் மீண்டும் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்.

- Advertisement -

கோபமான ஜெயசூர்யா:
அதனால் கடைசியில் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தும் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா பரிதாபமாக தோற்றது. இலங்கைக்கு அதிகபட்சமாக ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அந்தப் போட்டியில் ரோகித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாட முயற்சித்தார்.

இருப்பினும் அகிலா தனஞ்செயா வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி சரியாக அடிக்கத் தவறினார். அதனால் அந்த பந்து அவருடைய காலில் பட்டதை தொடர்ந்து இலங்கை அணியினர் அவுட் கேட்டனர். அதனால் களத்தில் இருந்த நடுவரும் அவர் கொடுத்து விட்டார். இருப்பினும் விராட் கோலி ரிவியூ எடுத்ததை தொடர்ந்து 3வது நடுவர் சோதித்தார். அப்போது விராட் கோலியின் பேட்டின் மீது பந்து உரசுவது போல் அல்ட்ரா எட்ஜில் ஸ்பைக் காண்பித்தது.

- Advertisement -

அதனால் 3வது நடுவர் தீர்ப்பை மாற்றி விராட் கோலி நாட் அவுட் என்று அறிவித்தது இலங்கை அணியினரை வெறுப்படைய வைத்தது. ஏனெனில் பக்கவாட்டு கோணத்தில் பந்து விராட் கோலியின் பேட்டை தொடுவதற்கு சில இன்சுகள் முன்பாகவே அல்ட்ரா எட்ஜ்ஜில் ஸ்பைக் தெரிந்தது. அதே போல நேரான கோணத்தில் விராட் கோலியின் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பது தெரிந்தது. அதனால் இது எப்படி அவுட்டாகும்? என்று 4வது நடுவரிடம் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையம் படிங்க: டிஎன்பிஎல் 2024 : 8 வருட தவம்.. கோவையை அடக்கிய திண்டுக்கல்.. அஸ்வின் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

அதே போல களத்தில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் தன்னுடைய ஹெல்மெட்டை கழற்றி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாக சமூகவலைதளங்களில் விமர்சித்தனர். மறுபுறம் தமக்கு அதிர்ஷ்டம் இருப்பதை பார்த்த விராட் கோலி புன்னகையுடன் தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஆனால் அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாத அவர் அடுத்த சில ஓவர்லே அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு காரணமானது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

Advertisement