இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டி20 வடிவ போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வருகிறார். தற்போது 36 வயதாகும் விராத் கோலி தனது கரியரின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.
மோசமான சரிவை சந்தித்த விராட் கோலி :
இவ்வேளையில் அவரது பேட்டிங் ஃபார்ம் கடந்த சில தொடர்களாகவே மோசமான நிலையில் இருந்து வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 6 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 93 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
இதன் காரணமாக விராட் கோலியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்து வந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ள விராட் கோலி பெர்த் நகரில் நடைபெற்ற வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 12 பந்துகளை சந்தித்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
இப்படி இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணிலாவது தனது கம்பேக் கொடுத்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இந்த போட்டியிலும் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து உள்ளதால் அவர் ரிட்டையர் ஆகும் நேரம் வந்துவிட்டது என்றும் சில விமர்சனங்கள் ரசிகர்கள் மூலம் பகிரப்பட்டு வருகின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷினாக இருந்து வந்த விராத் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான சரிவை சந்தித்துள்ளதால் அவர் மீது ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆஸி 67/7 என சறுக்கல்.. ஸ்மித்தை தெறிக்க விட்ட பும்ரா.. 10 வருடத்துக்கு பின் டேல் ஸ்டைனுக்கு நிகராக மாஸ் சாதனை
இந்திய அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்ட வேளையில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் 83 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளை ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.



