ஆஸி 67/7 என சறுக்கல்.. ஸ்மித்தை தெறிக்க விட்ட பும்ரா.. 10 வருடத்துக்கு பின் டேல் ஸ்டைனுக்கு நிகராக மாஸ் சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சுமாராக பேட்டிங் செய்து வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜெய்ஸ்வால், படிக்கல் டக் அவுட்டான நிலையில் விராட் கோலி 5, துருவ் ஜுரேல் 11, சுந்தர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். நங்கூரமாக விளையாடிய ராகுல் சர்ச்சையான தீர்ப்பால் வெளியேறிய நிலையில் அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய பும்ரா:

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு மெக்ஸ்வீனியை 10 ரன்களில் அவுட்டாக்கிய ஜஸ்ப்ரித் பும்ரா மற்றொரு துவக்க வீரர் உஸ்மான் கவாஜாவையும் 8 ரன்னில் காலி செய்தார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவரையும் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் பும்ரா கோல்டன் டக் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கிய முதல் ஆசிய பவுலர் என்ற தனித்துவமான சாதனையை பும்ரா படைத்தார். அத்துடன் தென்னாபிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைனுக்கு பின் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கிய பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2014ஆம் ஆண்டு ஸ்டைனுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான ஸ்மித் தற்போது பும்ராவிடம் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

திருப்பி அடிக்கும் இந்தியா:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் ஹர்ஷித் ராணா அவுட்டானார். அதே போல அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷை 6 ரன்களில் காலி செய்த சிராஜ் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய லபுஸ்ஷேனை 2 (52) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் ஆஸ்திரேலியா அணியும் ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்தது.

இதையும் படிங்க: 650 ரன்ஸ்.. ஏபிடி போல மாஸ் சிக்ஸ்.. ஆலன் நாட்டை முந்திய ரிஷப் பண்ட்.. ஆஸியில் மாபெரும் உலக சாதனை

இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 67-7 என திணறி வருகிறது. களத்தில் அலெக்ஸ் கேரி 19*, ஸ்டார்க் 6* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலையில் இன்னும் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 83 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்காக போராட்டத்தை துவங்கியுள்ளது.

Advertisement