இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
விராட் கோலி நிகழ்த்திய மாபெரும் சாதனை :
அதனை தொடர்ந்து தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.சி.பி அணி 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலுடன் இரண்டாவது இடத்திலும், எட்டு போட்டியில் விளையாடிய குஜராத் அணி நான்கு வெற்றிக்களுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது.
பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வேளையில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 13 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த இந்த ரன்களின் மூலம் உலக அளவில் முதல் வீரராக ஐ.பி.எல் டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது இந்த போட்டியின் போது ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்ததோடு சேர்த்து விராட் கோலி இந்தியாவில் மட்டும் 8000 ஐபிஎல் ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதையும் படிங்க : ரியான் பராக்கிற்கு அபராதம் விதித்து ஒரு தகுதியிழப்பு புள்ளியையும் வழங்கிய ஐ.பி.எல் நிர்வாகம் – என்ன காரணம்?
வேறு எந்த ஒரு வீரரும் இந்திய மண்ணில் 7000 ரன்களை கூட நெருங்காத வேளையில் இந்திய மண்ணில் 8000 ஐபிஎல் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா 6274 ரன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



