ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நாளாகும். முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் பேட்டிங் தேர்வு செய்து அந்த அளவிற்கு ஆடவில்லை. அந்த அணியின் இளம் வீரர் மகிபால் மட்டுமே ஓரளவிற்கு அடி 47 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி மிக எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஒரு அரைசதம் அடித்தனர். அதிலும் கேப்டன் விராட் கோலி 53 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் வெற்றிபெற வைத்தார்.
இதன் மூலம் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்து அதன் மூலம் விராட் கோலி ஐ.பி.எல் அரங்கில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் முதன்முதலாக 5500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விராட் கோலி.
வேறு எந்த வீரரும் 5500 ரன்களை ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் அடித்தது கிடையாது. 180 போட்டிகளுக்கு மேல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 157 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்து இந்த சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ.பி.எல் தொடர் ஆரம்பத்ததில் இருந்து அவர் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.