இதுமட்டும் நடந்தா விராட் கோலி மீண்டும் கேப்டனாவது உறுதி.. நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

விராட் கோலி மீண்டும் கேப்டனாகும் வாய்ப்பு :

இந்த தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இம்முறையும் கோப்பையை கைப்பற்றி ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட முடியாது என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளுக்கும் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கதே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த ஒரு வீரருக்கும் துணை கேப்டன் பதிவு வழங்கப்படாத போது புதிய கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார்கள்? என்ற சந்தேகம் இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை கே.எல் ராகுல், பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் இந்திய அணியை முறையாக வழிநடத்த அனுபவம் வாய்ந்த ஒரு கேப்டன் தேவை. அந்த வகையில் பார்க்கையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மட்டுமின்றி கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றிகளை குவித்து வைத்துள்ள விராட் கோலியிடம் இந்திய அணி பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

இதையும் படிங்க : இந்தியா – வங்கதேசம் 3வது டி20 நடைபெறும் ஹைதராபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஒருவேளை கம்பீரும், அகர்கரும் விராட் கோலியை ஆதரித்து நிர்வாகத்திடம் பேசினால் நிச்சயம் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் விராட் கோலி என்ன முடிவு எடுப்பார்? என்பதும், நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும்? என்பதும் அவர்களிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement