இந்தியா – வங்கதேசம் 3வது டி20 நடைபெறும் ஹைதராபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

hydrabad stadium
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதனுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி அக்டோபர் பன்னிரண்டாம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

அப்போட்டியிலும் வென்று 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஸ் செய்து இந்தியா கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது. மறுபுறம் ஏற்கனவே டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த வங்கதேசம் இத்தொடரையும் இழந்துள்ளது. எனவே கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்து இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய வங்கதேசம் போராட உள்ளது.

- Advertisement -

ஹைதராபாத் மைதானம்:

இந்தப் போட்டி ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2004ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 39000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே வரலாற்றில் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 2 போட்டிகளிலும் விளையாடி 2 வெற்றிகளைக் கண்டுள்ள இந்தியா முதல் முறையாக வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இங்கு அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ள அணி இந்தியா: 209-4, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019

வெதர் ரிப்போர்ட்:

ஹைதராபாத் நகரில் அக்டோபர் 12ஆம் தேதி 20 – 23% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் மேகமூட்டத்துடன் கூடிய ஈரப்பதமான சூழ்நிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

ஹைதெராபாத் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் மைதானமாக இருக்கிறது. கூடவே மைதானத்தின் பவுண்டரி அளவுகளும் கொஞ்சம் சிறியதாகவே இருக்கிறது. எனவே நன்கு செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி நன்றாக வீசினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: இந்தியா உட்பட யாருமே எடுக்காத முடிவு.. தோல்விகளால் அம்பயர் அலீம் தாரை வைத்து பாகிஸ்தான் அறிவிப்பு

வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 196. சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 198. அத்துடன் இதற்கு முன் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளிலும் சேசிங் செய்த அணியே வென்றுள்ளது. எனவே பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement