இந்தியா உட்பட யாருமே எடுக்காத முடிவு.. தோல்விகளால் அம்பயர் அலீம் தாரை வைத்து பாகிஸ்தான் அறிவிப்பு

Aleem Dar
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்தது. ஆனால் அதே பிட்ச்சில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்தது.

அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை 220 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் குவித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தேர்வுக்குழுவில் அலீம் தார்:

அது போக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்விகளை சந்தித்தது. அதனால் தற்சமயத்தில் அந்த அணி அதள பாதாளத்தில திண்டாடுவது பாகிஸ்தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் வாரியம் 3 பேரை புதிதாக தேர்வு குழுவில் சேர்த்துள்ளது.

அந்தக் குழுவில் முன்னாள் வீரர்கள் ஆகிப் ஜாவேத், அசார் அலி ஆகியோருடன் அம்பயர் அலீம் தார் சேர்க்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர் என்ற மிகப்பெரிய உலக சாதனை படைத்த அலீம் தார் சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அவரை பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுவில் அந்நாட்டு வாரியம் உறுப்பினராக சேர்த்துள்ளது.

- Advertisement -

புதுமையான முடிவு:

சொல்லப்போனால் உலகிலேயே ஒரு முன்னாள் அம்பயர் அணியின் இப்படி தேர்வுக்குழு உறுப்பினராக சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாடுகளும் இப்படி ஒரு வித்தியாசம் முடிவை எடுத்ததில்லை. இருப்பினும் தொடர் தோல்விகளை நிறுத்த வேறு வழி தெரியாத பாகிஸ்தான் வாரியம் கிரிக்கெட்டை பற்றிய மிகப்பெரிய அனுபவம் கொண்ட அலீம் தாரை தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த 10 வெளிநாட்டு போட்டிகளும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.. ஆஸியில் அவர் துருப்புச்சீட்டா இருப்பாரு.. கங்குலி

இதைத் தொடர்ந்து அசாத் சபிக், அனலைஸ்ட் ஹசன் சீமா ஆகியோருடன் சேர்ந்து அந்த மூவரும் பாகிஸ்தான் அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர். இது போக அசார் முகமது துணை பயிற்சியாளராகவும் பிலால் அப்சல் பாகிஸ்தான் வாரியத்தின் ஆலோசகராகவும் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் நதிம் கான் மற்றும் உஸ்மான் வாலா ஆகியோர் உச்சகட்ட செயல்பாடுகளின் இயக்குனர், சர்வதேச போட்டிகளின் இயக்குனராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement