நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. குறிப்பாக கடைசி போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கில், ரோஹித், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் என 77/4 தடுமாறி இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அவருக்கு கை கொடுக்க முயற்சித்த நிதிஷ் ரெட்டி 53, ஹர்ஷித் ராணா 52 ரன்கள் விளாசி போராடி அவுட்டானார்கள்.
இளம் பையன் கோலி:
மறுபுறம் தொடர்ந்து போராடிய விராட் கோலி சதமடித்து 174 ரன்கள் எடுத்த போதிலும் ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்கள் கை கொடுக்கவில்லை. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் 36 வயதிலும் விராட் கோலி இளம் பையனைப் போல மிகவும் வேகமாக ஓடி சிங்கிள், டபுள் ரன்களை எளிதாக எடுப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார்.
அதனால் 45 வயது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான ஃபிட்னஸ் அவரிடம் இருப்பதாகவும் சைமன் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் தற்போதைய இந்திய அணியிலேயே விராட் கோலி தான் ஃபிட்டான வீரர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி விளையாடிய ஆட்டத்தில் சில ஷாட்டுகள் மிருதுவாகவும் தெளிவாகவும் இருந்தது”
45 வயது வரை:
“அதைத் தாண்டி சிங்கிள், டபுள் ரன்கள் எடுப்பதற்காக அவர் ஓடும் விதம் ஃபீல்டிங் செய்யும் அற்புதமாக இருந்தது. அவரிடம் இப்போதும் இளம் பயனைப் போன்ற காற்று இருக்கிறது. வயது மற்றும் அனுபவத்தைத் தாண்டி இப்போதும் அவர் இந்திய அணியில் ஃபிட்டான வீரராக இருக்கிறார். அதுவே தொழில்முறையாகும். வெற்றிக்கு தொலைவாக சென்ற சென்ற உங்களுடைய அணியை மீண்டும் இழுத்து வந்து வெற்றி பெற வைப்பதற்கான முயற்சி அவரிடம் இருக்கிறது”
இதையும் படிங்க: ஒருநாள் தொடரை தோற்று இருந்தாலும் கம்பீரின் இந்த முடிவை பாராட்டியே ஆகனும் – சடகோபன் ரமேஷ் கருத்து
“அதற்காக மிகவும் கடினமாக ஓடும் அவர் தனக்காகவும் தன்னுடைய அணி வீரருக்காகவும் ரன்களை எடுக்கிறார். அந்த வகையில் தற்போது விராட் கோலி விளையாடும் விதத்தில் விரும்புவதற்கு நிறைய இருக்கின்றது. அதன் காரணமாக அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் 44 – 45 வயது வரை நிற்க முடியும்” என்று கூறினார்.



