எனக்கு அப்றம் இனிமேல் இவர் தான், தனது சாதனையை முறியடித்த சுப்மன் கில் பற்றி விராட் கோலி கூறியது இதோ

Shubman Gill Virat Kohli
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தன்னை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்து உலகின் நம்பர் ஒன் டி20 அணி கிரிக்கெட் என்பதற்கு அடையாளமாக அசத்தியுள்ளது. அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 234/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 126* (63) ரன்கள் குவித்தார்.

அதை தொடர்ந்து 235 ரன்களை துரத்திய நியூசிலாந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அனல் தெறிக்கும் பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 66 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 4 விக்கெட்களை சாய்த்தார். அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது.

- Advertisement -

இவர் தான் வருங்காலம்:
இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை தகர்த்த அவர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 122 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

அதை விட ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமடித்த அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்தார். அத்துடன் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019ஆம் ஆண்டு சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறினார். அதன் பின் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அட்டகாசமாக செயல்பட்டு மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்ரில் கம்பேக் கொடுத்தார்.

அதிலிருந்து இப்போது வரை தொடர்ந்து நிற்காமல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் இளம் வயதிலேயே சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் சீரான வேகத்தில் தொடர்ந்து பெரும்பாலான போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்கும் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக ஏற்கனவே ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : அண்டர்-19 உ.கோ வென்ற மகளிரணிக்கு பரிசுத்தொகை வழங்கி – சச்சின் பாராட்டி பேசியது இதோ

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து தன்னுடைய சாதனையும் உடைத்துள்ள சுப்மன் கில் “இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரம். இந்தியாவின் வருங்காலம் இங்கே வந்துள்ளது” என்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார். சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் ரன் மெசினாகவும் முதுகெலும்பாகவும் கருதப்படும் விராட் கோலியே இந்தியாவின் வருங்காலம் என்று சுப்மன் கில்லை பாராட்டியுள்ளது உண்மையாகவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றே கூறலாம்.

Advertisement