ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli and Rohit
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 11-வது ஆட்டத்தில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது சி.எஸ்.கே அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வீரரான விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோஹித் சர்மாவின் சாதனை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த விராட் கோலி :

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் விராட் கோலி 18 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்படி அவர் அடித்த இந்த 28 ரன்கள் மூலம் தான் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதாவது நேற்று சென்னை அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த 28 ரன்களோடு சேர்த்து சி.எஸ்.கே அணிக்கு எதிராக மட்டும் அவர் 1188 ரன்கள் குவித்துள்ளார். ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரராக ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரோகித் சர்மா 1161 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வந்தது.

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக அடித்த 28 ரன்கள் மூலம் 1188 ரன்கள் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளாசி ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு எதிராக முதல் அணியாக ஆர்.சி.பி அணி நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

கடந்த 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி இதுவரை அந்த அணிக்காக மட்டுமே விளையாடு வருகிறார். அதுமட்டுமின்றி இதுவரை 269 போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 64 அரைசதம் என 8758 ரன்கள் குவித்து ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement