- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் சாதனை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி – விவரம் இதோ

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று நவம்பர் 30-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி :

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நட்சத்திர வீரரான விராட் கோலி 120 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 135 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் இந்த போட்டியில் சதம் அடித்து தனது திறனை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் அவர் அதிரடியாக விளையாடிய விதம் அனைவரையும் வியக்க வைத்தது. இந்த போட்டியில் அவர் அடித்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-ஆவது சதமாக மாறியதோடு மட்டுமின்றி ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்த வாய்ப்பாக அமைந்தது.

அந்த வகையில் பல்வேறு சாதனைகளை இந்த இன்னிங்சின் மூலம் படைத்த விராட் கோலி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியில் அவர் அடித்த ஏழு சிக்ஸர்களையும் சேர்த்து இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அதிக சிக்சர்களை விளாசிய வீரராக விராட் கோலி 223 சிக்ஸருடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவை இப்படி பேசுறது ரொம்ப தப்பு.. அது அவரை மனரீதியாக பாதிக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்த போட்டிக்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் 217 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்து வந்த வேளையில் அவரது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதுமட்டும் இன்றி தனது சர்வதேச ஒருநாள் கரியரில் ஒரு போட்டியில் 7 சிக்ஸர்களை அவர் அடிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -