- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி தொடரில் பாகிஸ்தானை வெளுப்பதில் உலக சாதனை.. பாண்டிங் வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 5வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சவுத் ஷாக்கில் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 20, விராட் கோலி 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 46 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றியால் இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் என்றாலே:

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஏற்கனவே 2012 டி20 உலகக் கோப்பை, 2015 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் 2022 டி20 உலகக் கோப்பையிலும் வென்ற அவர் இதையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி தொடரில் 5வது ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

இதன் வாயிலாக அனைத்து விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும் ஐசிசி தொடர்களில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 5 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு யாரும் 4 விருதுகளை கூட வென்றதில்லை.

- Advertisement -

பாண்டிங்கை முந்திய கோலி:

இந்த 100 ரன்களையும் சேர்த்து 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் விராட் கோலி 27503* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் வாழ்நாள் சாதனையை அவர் உடைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக ரிக்கி பாண்டிங் 27483 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: லூசர் லூசர்.. அப்படியே மூட்டைய கட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்க.. அப்ரிடி, அப்ராருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

இது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். 158* கேட்ச்களை தனது கேரியரில் பிடித்துள்ள விராட் கோலி இந்தச் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 156 கேட்சுகள் பிடித்து அந்த சாதனையை தன் வசம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -