Virat Kohli : மீண்டும் சுழற்பந்தில் ஏமாந்த கோலி – வீடியோ

Virat
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரின் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

rr

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி தற்போது பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

அதன்படி விளையாடிய கோலி இந்த போட்டியிலும் ஏமாற்றினார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 23 ரன்களே எடுத்து ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

தற்போதுவரை பெங்களூரு அணி 15 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பெங்களூரு அணி தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது என்றே கூறவேண்டும்.

Advertisement