- Advertisement -
ஐ.பி.எல்

கிரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

ராய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 57-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது :

கிரிஸ் கெயிலின் சாதனையை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக அன்கிரிஷ் ரகுவன்ஷி 71 ரன்களையும், ரிங்கு சிங் 49 ரன்களையும் குவித்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை மிகச் சிறப்பாக துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 60 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 105 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் ஒன்பதாவது சதமாக இந்த சதம் பதிவாகியது. அதோடு ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 10 சதமாகவும் பதிவாகியது. நேற்றைய போட்டியில் அவர் அடித்த இந்த ரண்களின் மூலம் முன்னாள் ஆர்.சி.பி வீரரான கிரிஸ் ஜெயிலில் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் தகர்த்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : இந்த இலக்கு வெற்றிக்கு போதுமானது தான்.. ஆனாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – அஜின்க்யா ரஹானே வருத்தம்

ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 14000 ரன்களை விரைவாக குவித்த வீரராக கிரிஸ் கெயில் 423 போட்டிகளில் 14000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். இவ்வேளையில் நேற்றைய போட்டியில் விளையாடிய விராட் கோலி தனது 409-வது ஆட்டத்திலேயே டி20 போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டி கிரிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -