IND vs ENG : விராட் கோலி இப்போ இந்தியாவுக்கு பாரமாக மாறிட்டாரு – முன்னாள் பாக் வீரர் கடுமையான விமர்சனம்

Kohli
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சுமாரான பார்மில் தவிப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஜாம்பவான் சச்சினை போல் ஒரு ரன் மெஷினாக ஏராளமான ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். 70 சதங்களை விளாசி சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

kohli 1

- Advertisement -

ஆனாலும் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். மேலும் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பு தமது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அந்தப் பதவிகளிலிருந்து படிப்படியாக விலகி கடந்த ஜனவரியில் இருந்து சுதந்திர பறவையாக விளையாடியதால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சொதப்பும் விராட்:
ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே 3 முறை கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட மோசமாக செயல்படும் அவரை 2 – 3 மாதங்கள் ஓய்வு எடுத்து ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி, மைக்கல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் தொடர்ச்சியாக விளையாடும் போதிலும் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக பர்மிங்காமில் நடந்த சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் இந்தியாவின் வரலாற்று தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

kohli

இருப்பினும் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்ற காரணத்திற்காக இதுநாள் வரை ஃபார்மை காரணம் காட்டி அவரை நீக்காத இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனால் பெரிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ரன்கள் அடிக்காமல் எத்தனை நாட்கள் அணியில் நீடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள இந்திய ஜாம்பவான் கபில் தேவ் விராட் கோலியை நீக்கும் தருணம் வந்துவிட்டதாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

பாரமாக மாறிவிட்டார்:
இத்தனைக்கும் தீபக் ஹூடா போன்ற சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களை பெஞ்சில் அமர வைத்துவிட்டு பெரிய பெயர் பெற்றுள்ளார் என்பதற்காக கொடுக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 1 ரன்னில் அவுட்டான விராட் கோலி மீண்டும் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் விராட் கோலி சமீப காலங்களில் இந்திய அணிக்கு பாரமாக மாறிவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Kaneria

“அணியில் பெரிய பெயருடைய வீரர்கள் இல்லாத நிலைமையில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். அதனால் பெரிய வீரர்கள் நாம் அணிக்கு பாரமாக அமைகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். விராட் கோலி தற்போது பாரமாகிவிட்டார். எனவே ஒன்று அவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப வேண்டும் அல்லது தனது இடத்தை கொடுத்துவிட வேண்டும்.

- Advertisement -

அந்த பழைய விராட் கோலி எங்கே? அவருக்கு என்ன ஆயிற்று? அவர் விரைவில் பெரிய ரன்கள் அடிப்பார்கள் என்று நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்க வேண்டும்” என்று கூறினார். ஓடிஓடி ரன்கள் எடுத்த களைப்பு விராட் கோலியின் உடலிலும் மனத்திலும் தெரிந்ததால் சமீபத்திய ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி சில மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Kohli

ஆனால் அதை காதில் வாங்காத அவர் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடி அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஓய்வு கேட்டுள்ளார். இது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள டேனிஷ் கனேரியா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : நான் டி20 அணியை செலக்ட் பண்ணா அதுல விராட் கோலியை எடுக்க மாட்டேன். ஏன் தெரியுமா? – அஜய் ஜடேஜா பேட்டி

“அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி ஓய்வெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தை வீணடித்து விட்டார். ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்கும் நேரமாகும். அவர் தற்போது அணிக்கு பாரமாக இருக்கிறார். இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த அணியாக இருந்தாலும் பெரிய பெயருடைய வீரர்கள் இல்லையென்றால் அந்த அணி சிறப்பாக செயல்படாது என்று அர்த்தமில்லை” என கூறினார்.

Advertisement