IND vs PAK : பாகிஸ்தானுக்கு எதிராக பார்முக்கு திரும்பிய கிங் கோலி – படைத்த உலகசாதனை என்ன தெரியுமா?

Advertisement

2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181/7 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 28 ரன்களை அதிரடியாக எடுத்து அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அந்த நிலைமையில் வந்த தீபக் ஹூடா 14 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 3-வது இடத்தில் களமிறங்கி இந்தியாவை தாங்கிப் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

போராடி தோல்வி:
இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சரிவை சரி செய்து வெற்றியை உறுதி செய்த முகமது நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (20) ரன்களும் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 71 (51) ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அதனால் ஏற்பட்ட திருப்புமுனையை பயன்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் கடைசி நேரத்தில் வந்த பாகிஸ்தான் வீரர்கள் குஷ்தில் ஷா 14* (11) ரன்களும் ஆசிப் அலி 16 (8) ரன்களும் எடுத்து பினிசிங் செய்யும் அளவுக்கு சுமாராக செயல்பட்டனர்.

IND vs PAk Rahul Hardik Pandya

அதனால் 19.5 ஓவரில் 182/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் லீக் சுற்றில் தோல்வியை கொடுத்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா தலை குனிந்து இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய போட்டியில் வென்றால் தான் பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சிம்மசொப்பனமாக விராட்:
இப்போட்டியில் ரோஹித் போன்ற முக்கிய வீரர்களின் மோசமான பேட்டிங் புவனேஸ்வர் குமாரின் மோசமான பவுலிங் அர்ஷிதீப் சிங் கேட்ச்சை கோட்டை விட்டது என 3 வகையான துறைகளிலும் இந்தியா சொதப்பியது. ஆனால் பேட்டிங் துறையில் 6வது ஓவரில் களமிறங்கிய விராட் கோலி மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக மாறி கடைசி ஓவர் வரை நங்கூரமாக நின்று 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்களை 136.36 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசி வெற்றிக்காக போராடினார்.

Virat Kohli IND vs PAK

கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினம்தோறும் விமர்சனங்களை சந்தித்த அவர் ஒரு மாதம் ஓய்வெடுத்து இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடி வருகிறார். அதில் முதல் போட்டியில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் 35 ரன்களை எடுத்து வெற்றிக்கு பங்காற்றிய போதிலும் மெதுவாக பேட்டிங் செய்தார் என்ற விமர்சனங்களை சந்தித்த அவர் ஹாங்காங்க்கு எதிராக 59* (44) ரன்கள் குவித்த போதிலும் தரமற்ற பந்துவீச்சில் எடுத்தார் என்ற விமர்சனங்களை மீண்டும் சந்தித்தார்.

- Advertisement -

பார்முக்கு திரும்பி:
ஆனால் நேற்றைய போட்டியில் தரமாக பந்து வீசிய பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவை தலைநிமிர வைத்த அவர் தடுமாறாமல் விளையாடினார். குறிப்பாக சிக்ஸர் அடித்து அரை சதத்தை தொட்ட அவரது பேட்டிங்கை பார்த்தபோது கிட்டதட்ட பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. மேலும் இப்போட்டியில் 60 ரன்கள் குவித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற ரோகித் ஷர்மாவின் சாதனையை தற்போது புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 32*
2. ரோஹித் சர்மா : 31
3. பாபர் அசாம் : 27

2. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மட்டும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். ஆனால் மற்ற அனைத்து இந்திய வீரர்கள் சேர்ந்து (கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங்) மொத்தமாக 3 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்கள்.

- Advertisement -

3. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஆரோன் பின்ச், கேன் வில்லியம்சன், கெவின் பீட்டர்சன் மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோருடன் (தலா 4) பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : IND vs PAK : வெற்றிக்கான முக்கிய கேட்ச்சை விட்ட இளம் வீரர் – கொந்தளித்த ரோஹித் (வீடியோ உள்ளே)

4. இத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 264
2. விராட் கோலி : 194*
3. ராகுல் டிராவிட்: 193

Advertisement