சச்சினை காலி செய்து ஜாம்பவான் பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற விராட் கோலி – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் முறையே 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி நடைபெற்று வருகிறது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கவுரவமாக முடிக்கும் எண்ணத்தில் இந்திய அணியும், இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை முடித்துள்ள இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் விராத் கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் இந்த போட்டியில் கோலி 23வது ரன்னை குவிக்கும் போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

Kohli 1

அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ரன்களை கடந்த சாதனையாளராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி இந்த போட்டியில் முறியடித்துள்ளார் .சச்சின் டெண்டுல்கர் 309 போட்டிகளில் விளையாடி 300 இன்னிங்ஸ்களுடன் 12,000 ரன்களை குவித்தார். ஆனால் விராட் கோலி தனது 251 போட்டியில் 242 வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.

Kohli

மேலும் 12,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சினை தொடர்ந்து பாண்டிங் 3-வது இடத்திலும், சங்கக்காரா நான்காவது இடத்திலும், ஜெயசூர்யா 5வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி இந்த பட்டியலில் கோலி முதலிடம் பிடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Advertisement