விராட் கோலி கொடுத்த கிஃப்டால் பாலோ ஆனில் இருந்து தப்பிய இந்திய அணி – சுவாரசிய பின்னணி இதோ

Akash-Kohli
- Advertisement -

பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை சந்தித்த வேளையில் பின்வரிசையில் வந்த வீரர்களால் தற்போது ஃபாலோ ஆனை வெற்றிகரமாக கடந்துள்ளது.

விராட் கோலியின் பரிசால் தப்பிய இந்திய அணி :

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்த வேளையில் கடைசி கட்டத்தில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க போராடியது. அதிலும் குறிப்பாக ஒன்பதாவது விக்கெட் 213 ரன்களுக்கு எல்லாம் விழுந்தது.

- Advertisement -

பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரது ஜோடி ஃபாலோ ஆனை தவிர்த்து தற்போது இந்திய அணியை மீட்டெடுத்துள்ளது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ள பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் 11-வது வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் 31 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 27 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்நிலையில் இந்திய அணி பாலோ ஆனில் இருந்து தப்பியதற்கு விராட் கோலி கொடுத்த கிஃப்ட் தான் காரணம் என்ற சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் அந்த பின்னால் உள்ள சுவாரசியம் யாதெனில் : பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஆகாஷ் தீப் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதை கண்ட விராத் கோலி அவருக்கு தன்னுடைய புதிய பேட் ஒன்றை கையொப்பமிட்டு பரிசளித்திருந்தார். அதனை வாங்கிய ஆகாஷ் தீப்பும் : விராட் கோலி என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவரிடம் இருந்து பேட்டை வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி. அதை வைத்து நான் நிச்சயம் சிறப்பாக விளையாடினால் அவர் பெருமை அடைவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ஹிட்மேன்? அவுட்டானதும் ரோஹித் செய்த செயலால் – ரசிகர்கள் யூகம்

அந்த வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போதே அந்த பேட்டை வைத்து சில சிக்ஸர்களை அடித்திருந்த ஆகாஷ் தீப் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அதே பேட்டை வைத்து ஃபாலோ ஆனில் இருந்து காப்பாற்றியது விராட் கோலியையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கும் என்று நம்பலாம்.

Advertisement