என்ன ஆனாலும் சரி நான் இவரை டீம்ல இருந்து தூக்க மாட்டேன் – கேப்டன் விராட் கோலி அறிவிப்பு

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடரானது துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தங்களது கணக்கினை துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

pak 1

- Advertisement -

ஏற்கனவே இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் யார் ? யார் ? விளையாடுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது சற்று கடினமான முடிவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை அணியில் இருந்து நிச்சயம் நீக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இருந்து ஹார்டிக் பாண்டியாவை வெளியேற்ற முடியாது. ஏனெனில் 6-வது வீரராக களமிறங்கி அவர் போட்டியை சிறப்பாக பினிஷிங் செய்து வருகிறார். மேலும் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் அவரால் செயல்பட முடியும் என்பதனால் அது இந்திய அணிக்கு பெரும் பலம்.

Sky

தற்போது பாண்டியா பந்துவீசவில்லை என்றாலும் இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் குறைந்தது இரண்டு ஓவர்கள் பந்து வீசுவார். நமது அணியில் ஆறாவது பவுலர் 2 ஓவரை பகிர்ந்து வீசவும் வாய்ப்பு உள்ளது. பாண்டியா ஆறாவது இடத்தில் களம் இறங்கி தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது ஒரே இரவில் நடந்ததல்ல. அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரின் போது அவரை ஒரு பேட்ஸ்மேனாக தான் அணியில் வைத்து இருந்தோம். அந்த தொடரில் கூட போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஏற்பட்ட அவமானம் – யாருமே இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

இறுதி ஓவர்களில் மிகப் பெரிய ஷாட்களை அடித்து போட்டியை சிறப்பாக முடிக்கும் பாண்டியா இந்திய அணி துவக்கத்தில் சறுக்கல் கண்டாலும் பின்வரிசையில் அவரால் அதிரடி காட்டி ரன்களை குவிக்க முடியும். போட்டியின் எந்த நேரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர் ஹார்டிக் பண்டியா எனவே அவரை அணியில் இருந்து வெளியேற்றுவது கடினம் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹார்டிக் பாண்டியா விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement