ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடாமலேயே தோற்றது. அந்த தோல்விக்கு 224 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக களமிறங்கிய விராட் கோலி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஒருநாள் போட்டியில் டக் அவுட்டானது காரணமானது.
அதே போல ரோஹித் சர்மாவும் 8 ரன்னில் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அந்த சூழ்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு இரண்டாவது போட்டி துவங்கியது அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அடுத்தடுத்த டக்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 9 (9) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த விராட் கோலி 4 பந்துகளை எதிர்கொண்டு சேவியர் பார்லட் வேதத்தில் மீண்டும் டக் அவுட்டாகி இந்திய அணிக்கு ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். இத்தனைக்கும் அடிலெய்ட் மைதானத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 12 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 975 ரன்களை குவித்துள்ளார்.
அதனால் அடிலெய்ட் மைதானம் இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு மண்ணில் விராட் கோலியின் கோட்டையாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ராசியான மைதானத்தில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதன் வாயிலாக தமது கேரியரில் முதல் முறையாக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
18 வருடம் காணாத பரிதாபம்:
2008 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் கடந்த 18 வருடங்களில் ஒருமுறை கூட இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டானது கிடையாது. ஆனால் இன்று தம்முடைய கேரியரில் காணாத மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும் ஜஹீர் கானுக்கு (43) பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மா (40) சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார். இருப்பினும் தரமான வீரரான அவர் டக் அவுட்டாகி சென்ற போது அடிலெய்ட் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவரை கைதட்டி பாராட்டி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அவரை மாதிரியான அரைகுறை வேகத்துக்கு குல்தீப் எவ்வளவோ பரவால்ல.. ஏன் ஒதுக்குறீங்க? ஸ்ரீகாந்த் கேள்வி
தொடர்ந்து நடைபெறும் போட்டியில் மறுபுறம் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி வருகிறார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் மெதுவாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்ய முயற்சித்து வருகிறார். அதனால் இப்பதிவிடும் போது இந்தியா 50/2 என்ற நிலையில் தடுமாற்றமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



