அவரை மாதிரியான அரைகுறை வேகத்துக்கு குல்தீப் எவ்வளவோ பரவால்ல.. ஏன் ஒதுக்குறீங்க? ஸ்ரீகாந்த் கேள்வி

K Srikkanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அத்துடன் பவுலிங் துறையில் குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்படாதது தோல்விக்கு காரணமானதாக ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். எனவே 2வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவரை விளையாட வைப்பது அவசியம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குல்தீப் யாதவ் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னர்கள் மேட்ச் வின்னர்களாக செயல்படுவார்கள் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேட்ச் வின்னர் குல்தீப்:

எனவே ஹர்ஷித் ராணா போன்ற அரைகுறை வேகத்தில் வீசும் மித வேகப்பந்து வீச்சாளர்களை விட அவரை தேர்ந்தெடுப்பது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து வருவது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு.

“முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஹேசல்வுட், ஸ்டார்க்கை தவிர்த்து விக்கெட்டுகளை எடுத்து யார்? ஸ்பின்னரான மேத்தியூ குனேமான் எடுத்தார். அவரைப் போல நமக்கு அக்சர் பட்டேல் முக்கிய விக்கெட் எடுத்துக் கொடுத்தார். நமக்கு ஸ்பின்னர்கள் நல்ல வேலையைச் செய்தனர். குறிப்பாக மணிக்கட்டு ஸ்பின்னர்கள் மேட்ச் வின்னர்கள்”

- Advertisement -

ஏன் ஒதுக்கிறீங்க:

“அப்படி இருந்தும் குல்தீப் யாதவ் எந்த லாஜிக் அடிப்படையில் நீக்கப்படுகிறார்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதும் நான் வாசிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரை ஒன்றாக விளையாட வைப்பேன். ஏனெனில் இது போன்ற சூழ்நிலைகளில் மித வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்கள் நல்ல வேலையைச் செய்வார்கள்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு போராடனும்ன்னா.. ஃபுல்டாக் மாதிரி அசத்தும் கில் கேரக்டர் சிறப்பானது.. ரிக்கி பாண்டிங்

“இத்தனைக்கும் டெஸ்ட் மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் குல்தீப் நன்றாக பந்து வீசினார். ஆஸ்திரேலியாவில் பந்து அதிகம் சுழலாது என்பதால் அவரை விளையாட வைக்கவில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட கருத்து ஆபத்தானது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது. முதலில் 8 பேட்ஸ்மேன்கள் தேவை என்பதை மறந்து விடுங்கள். அணிக்கு சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுங்கள்.8வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் (ஹர்ஷித் ராணா) மட்டும் எப்படி உங்களுக்கு அதிக ரன்களை எடுத்துக் கொடுப்பார்?” என்று கூறினார்.

Advertisement