இந்திய அணிக்கு போராடனும்ன்னா.. ஃபுல்டாக் மாதிரி அசத்தும் கில் கேரக்டர் சிறப்பானது.. ரிக்கி பாண்டிங்

Ricky Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் வளர்க்கப்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் நிறைய விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக கடந்த காலங்களில் வெளிநாட்டில் பெரிய ரன்கள் குவிக்காத காரணத்தால் வெளிநாட்டுப் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவரை கேப்டனாக நியமிக்கலாமா என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சவாலான இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய கில் 754 ரன்கள் குவித்து பல சாதனைகள் படைத்து 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. மேலும் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள அவர் சூரியகுமாருக்கு பின் இந்தியாவை தலைமைத் தாங்க தயாராகி வருகிறார்.

- Advertisement -

புதிய கேப்டன் கில்:

இந்நிலையில் சுப்மன் கில் அமைதியான குணத்தைக் கொண்டவர் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் ஆபத்தான சூழ்நிலையில் இந்திய அணிக்காக போராட வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது ஃபுல்டாக் போல சுப்மன் கில் போராடி அசத்துவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அதை இங்கிலாந்தில் பார்த்ததாக தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இங்கிலாந்தில் நல்ல அணிக்கு எதிராக கில் என்ன செய்தார் என்பதை நான் விரும்புகிறேன். அத்தொடரில் சில தருணங்களில் அவர் தன்னுடைய இயற்கையான குணத்தை விட்டு விலகி இருந்திருக்கலாம். அவர் அணியில் தன்னுடைய முத்திரையைப் பதிப்பதற்காகவும் அணியுடன் நிற்பதற்காகவும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்”

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

“மான்செஸ்டரில் மைதானத்தை விட்டு வெளியேறாதது போன்ற அவர் செய்த சிறிய விஷயங்களால் வலுவான தோற்றத்தை ஏற்படுத்தினார் என்று நினைக்கிறேன். அவர் அணியில் தனது அதிகாரத்தை மிக விரைவாக உறுதிப்படுத்தினார். மேலும் தன்னுடைய பேட்டிங்கில் அவர் அணிக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். மணலில் கோட்டை வரைய வேண்டிய முக்கியமான தருணத்தில் அவர் அதை செய்தார்”

இதையும் படிங்க: ஆஸி அட்டிடியூட் கொண்ட பாண்டியா இதை செய்ய ஆசைப்படுறேன்.. இந்தியா மிஸ் பன்றாங்க.. மைக்கேல் கிளார்க்

“பொதுவாக அது அவருடைய வழி கிடையாது. ஏனெனில் பொதுவாக அவர் களத்தில் பொறுமையுடன் அமைதியாக இருக்கக்கூடியவர். ஆனால் உண்மையாக போராடும் சூழ்நிலை வரும் போது அல்லது அணிக்கு அதிகமாக தேவைப்படும் போது அவரிடம் இருந்து ஃபுல்டாக் வெளிப்படுகிறது. ஒரு நாட்டுக்காக விளையாடும் வீரரிடம் நான் அதையே பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement