தமிழக வீரர்களை புறக்கணிக்கும் கோலி…அன்று அஸ்வின், இன்று சுந்தர் ! – காரணம் இதுதான் ?

washington
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டிகளில் பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி,அந்த அணியில் விளையாடி வரும் தமிழக வீரர்களை புறக்கணிக்கிறா என்று தற்போது புதிய சர்ச்சையான கேள்வி ஒன்று அனைத்து தமிழ் ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.

Virat

- Advertisement -

7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டிய்லில் 7வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் தான். அந்த அணியில் ஸ்பின்னர்களான அஸ்வின்,சஹல் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இருந்தும் அந்த அணியால் போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது.

இதற்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டனான கோலி திறமையான தமிழக வீரர்களை குறைவாக பயன்படுத்துவதால் என்று ஒரு சில எண்ணமும் தோன்றுகிறது. அந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின்,வாஷிங்டன் சுந்தர் , முருகன் அஸ்வின் என்று சிறப்பான தமிழக வீரர்கள் உள்ளனர். மேலும் இந்த ஐபில் தொடரில் விளையாடி வரும் அஸ்வின் தனது பௌலிங் திறமைகளை முற்றிலும் வெளிக்காட்டி வருகிறார்.

ashwin

இதுவரை 7 போட்டிகளில் ஆடிய சஹல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அதனால் அவருக்கு அணியில் அடிக்கடி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கூட வைத்து கொள்வோம் . ஆனால் அதே போன்று கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய முருகன் அஸ்வின் இரண்டு விக்கெட் எடுத்தார். 4 ஓவர் போட்டு 36 ரன்கள் மட்டுமே கொடுத்த இவர் , உத்தப்பா, நரேன் என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இவ்வளவு நன்றாக பந்து வீசும் இவரை ஏன் இதுவரை அணியில் சேர்க்கவில்லை.

- Advertisement -

இதனை அடுத்து இவரை அணியில் சேர்ந்தவுடன் இதுவரை பெங்களூரை அணியில் சிறப்பாக ஆடி வரும் வாஷிங்டன் சுந்தரை ஏன் அணியில் இருந்து நீக்கினார் . ஆல் ரவுண்டு பிளேயராணா வாஷிங்டன் சுந்தருக்கு இது வரை ஆடிய போட்டிகளில் சரியான வாய்ப்பும் தரப்படவில்லை. மேலும் அவர் பேட்டிங் ஆர்டரிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனாகதான் இதுவரை களமிறங்கியுள்ளார்.

murugan

இவை அனைத்தையும் வைத்து பார்கும் போது தான் தமிழக வீரரை அஷ்வின் புறக்கணித்து வருகிறாரோ என்று நமக்கு எண்ணம் தோன்றுகிறது. மேலும் இந்திய அணியில் கேப்டன் பதிவில் இருந்து விலகிய தோனிக்கு பிறகு கோலி கேப்டனாக பொறுப்பேற்ற உடன் இந்திய அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement