விளையாட்டா, ஜாலியா யாரும் இருக்கக்கூடாது. ரூல்ஸ்ஸ ஸ்ட்ரிக்டா பாலோ பண்ணுங்க – கோலி கண்டிப்பு

Kohli-1
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்தியாவில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது பலத்த பாதுகாப்புக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை இத்தொடர் முழுமையாக நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டன.

IPL

மேலும் அங்கு வழங்கப்பட்டுள்ள முறையான வழிகாட்டுதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே தற்போது அனைத்து அணிகளையும் சேர்ந்த வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தை மீறக்கூடாது, ஜாலியாக இருப்பது, ஊர் சுற்றிப் பார்ப்பது என எதுவும் இருக்கக்கூடாது என ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி வீரர்களிடையேயே சற்று கடுமையாக பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். அதனால் இங்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வளையத்தை ஒருபோதும் மீறக் கூடாது. ஏனென்றால் நாம் ஜாலியாக இருப்பதற்கு அல்லது ஊரை சுற்றி பார்ப்பதற்காக இங்கு வரவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

rcb 2

நமக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை மட்டுமே பின்பற்றினால் போதும். தேவையற்ற செயல்களை யாரும் செய்யக்கூடாது. அப்போதுதான் இந்த தொடர் திட்டமிட்டபடி முழுமையாக நடைபெறும் என்று கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது இது சாத்தியமாகி இருக்கிறது.

rcb 1

எனவே இதை யாரும் கெடுக்காமல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டியது நமது ஒவ்வொரு வீரர்களின் கடமையாகும். எனவே இதை அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும் என விராத் கோலி வீரர்களின் கடுமையான கட்டளை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement