ரசிகர்களிடம் கோலி வைத்த வேண்டுகோள். அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஷமி – விவரம் இதோ

Ind-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்கள் குவித்தார். தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. துவக்க வீரர் ரோஹித் 6 ரன்களில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

புஜாரா 43 ரன்களுடனும் அகர்வால் 37 ரன்களுடன் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி பந்து வீசும் பொழுது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோலி, கோலி என்று கத்தினர் ஆனால் கோலி ரசிகர்களை நோக்கி தன்னை உற்சாகப் படுத்த வேண்டாம் ஷமியை உற்சாகப்படுத்துங்கள் என்று சைகை செய்தார் அவர் சொல்லி அடுத்த பந்திலேயே ஷமி ரஹீமின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.