ரோஹித், கோலி ரிட்டையராக போறாங்க.. அதுக்கு முன்னாடி ஆஸியில் இதை செய்யணும்.. மைக்கேல் கிளார்க் ஆசை

Micheal Clarke
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடுகிறார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் 36 வயதை கடந்துள்ள ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஏனெனில் அடுத்த தொடருக்கு முன் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கிளார்க் கூறியுள்ளார். எனவே தங்களுடைய கடைசி ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவர் ஆசை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலி – ரோஹித் சர்மா:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் இது அவர்களுடைய கடைசி தொடராக இருந்தால் அவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீக்கப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் அந்த சூழ்நிலையில் இருப்பார்கள். பொதுவாக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் எடுக்கவில்லையெனில் அந்த வீரர்களை சுற்றி விவாதங்கள் இருக்கும்”

“கேப்டனாக இருக்கும் நீங்கள் கடந்த 10 வருடங்களாக சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறீர்கள். விராட் கோலி மற்றவர்களை விட கொஞ்சம் அதிக வாய்ப்புகளை பெறுவார் என்று நம்புகிறேன். இந்த தொடரின் நன்மைக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் நன்மைக்காகவும் அவர்கள் இருவரும் இங்கே வந்து இந்தியாவுக்காக நல்ல ஃபார்மில் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் அட்டாக் நன்றாக இருக்கிறது”

- Advertisement -

கிளார்க் ஆசை:

“அவர்கள் வலுவான இந்திய டாப் ஆர்டரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்க விரும்புகிறோம். ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர்களை மற்ற இந்திய வீரர்களை விட சிறப்பாக எதிர்கொள்வார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளை அவர் அதிரடியாக எதிர்கொண்டு தேர்ட் மேன் திசைக்கு மேலே அடிக்கக்கூடும். விராட் கோலி கிளாஸ் நிறைந்தவர். அவருடைய சாதனைகள் அற்புதமானது”

இதையும் படிங்க: என்ன பண்றீங்க நீங்களெல்லாம் இந்திய அணியின் சீனியர் வீரர்களால் கடுப்பான கவுதம் கம்பீர் – என்ன நடந்தது?

“அவர் ஆஸ்திரேலியாவில் 13 போட்டிகளில் ஆறு சதங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட சராசரியில் ரன்கள் குவித்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் சுமாராக செயல்படுவதற்கு வந்துள்ளார்கள் என்று என்னுடைய மனம் சொல்லவில்லை. அவர்கள் இங்கே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். அதனால் அந்த இருவரையும் முடிந்தளவுக்கு வேகமாக ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்கள் அவுட் செய்வதற்கான வழியை கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement