என்ன பண்றீங்க நீங்களெல்லாம் இந்திய அணியின் சீனியர் வீரர்களால் கடுப்பான கவுதம் கம்பீர் – என்ன நடந்தது?

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடரானது துவங்க இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியா பயணித்துள்ள வேளையில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் இந்திய அணியுடன் இணையாமல் உள்ளார்.

சீனியர் வீரர்கள் மீது அதிருப்தியில் உள்ள கம்பீர் :

அவரை தவிர்த்து மற்ற அணி வீரர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்து விட்டனர். அதேபோன்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் தனது குடும்பத்துடன் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்ற தகவலும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு இந்த தொடருக்காக தயாராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி பயிற்சி போட்டிகளை ரத்து செய்து விட்டதால் வலைப்பயிற்சியிலாவது முறையாக ஈடுபட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் வலைப்பயிற்சியில் விருப்பமுள்ள வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பெரும்பாலான வீரர்கள் இந்த வலை பயிற்சியை தவிர்த்து உள்ளதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் இந்த வலைப்பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் இளம் வீரர்களான கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்த வலைப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இப்படி வலைப்பயிற்சியை தவிர்த்தால் பயிற்சியாளரான கௌதம் கம்பீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : நீங்க இங்கு வருவதை பாகிஸ்தான் மக்கள் விரும்புவார்கள்.. 2 இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுத்த – முகமது ரிஸ்வான்

ஏனெனில் ஆஸ்திரேலிய தொடர் எவ்வளவு மிக முக்கியமான தொடர் என்பது தெரிந்தும் சீனியர் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை என்றும் அதன் காரணமாக சீனியர் வீரர்கள் மீது அவர் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் ஒரு சில தினங்களில் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement