உலகத்துலயே நாங்க தான் ஐசிசியில் டாப் 2.. முடிஞ்சா கழற்றி விட்டு பாருங்க.. ரோஹித், கோலி சவால்

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து படுதோல்வியை சந்தித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அந்த பதிலடி வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றினார்கள்.

குறிப்பாக விராட் கோலி 3 போட்டிகளில் 2 சதம் உட்பட 302 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

உலகிலேயே டாப் 2:

தொடர்நாயகன் விருது வென்று அசத்திய விராட் கோலி 38 புள்ளிகளைப் பெற்று நியூஸிலாந்தின் டேரில் மிட்சேலை முந்தி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 36, 37 வயதில் முன்னேறி சாதனை படைத்துள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.

தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுகிறார்கள். இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டமாகும். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

விராட், ரோஹித் பதிலடி:

அதனுடைய முதல் படியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத ரோஹித், கோலி கடந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களின் நாயகன் விருது வென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். அதன் உச்சமாக தற்போது ஐசிசி தரவரிசையில் உலகிலேயே டாப் 2 பேட்ஸ்மேன்களாக முன்னேறி சாதனை படைத்துள்ள அவர்கள் முடிந்தால் எங்களை கழற்றி விட்டுப் பாருங்கள் என்று அகர்கர், கம்பீருக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: புவனேஷ்வர் குமாரின் அசத்தலான சாதனை சமன் செய்து அசத்திய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

அவர்களைத் தவிர்த்து கில், ஸ்ரேயாஸ் ஐயர் 5, 10வது இடங்களில் உள்ளார்கள். டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ் 3வது இடத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் அக்சர் பட்டேல் 10வது இருக்கிறார். அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது.

Advertisement