இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.
புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த அர்ஷ்தீப் சிங் :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 59 ரன்களையும், திலக் வர்மா 26 ரன்களையும் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி சார்பாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளையும், சிபாம்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 12.3 ஓவா்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 14 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்டுகளின் மூலம் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாரின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது துவக்க ஓவரையும், மூன்றாவது ஓவரையும் வீசிய அர்ஷ்தீப் சிங் அந்த 2 ஓவர்களிலுமே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் பவர் பிளேவிற்கு உள்ளாகவே அவர் 2 விக்கெட்டை வீழ்த்தி விட்டார்.
இதையும் படிங்க : 59 ரன்கள் அடித்ததோடு சேர்த்து 4 இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இந்த 2 விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருந்த புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்துள்ளார். புவனேஸ்வர் குமார் இதுவரை பவர்பிளே ஓவர்களில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்று எடுத்த 2 விக்கெட் மூலம் அர்ஷ்தீப் சிங்கும் 47 விக்கெட் எடுத்து அவரது இந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



