விராட் கோலி, ரவி சாஸ்திரி தான் எனக்கு அந்த வாய்ப்பில் 2வது பிறப்பை கொடுத்தாங்க.. ரோஹித் சர்மா

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கான்பூரில் மழையால் 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் சர்மா 2012 வரை மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவருடைய திறமையை உணர்ந்த அப்போதைய கேப்டன் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பில் பட்டையை கிளப்பிய ரோஹித் சர்மா இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்து நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

2வது பிறப்பு:

ஆனால் 2018 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தடுமாற்றமாகவே விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நிலையில் 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 5 சதங்கள் அடித்த உலக சாதனை படைத்ததார். அதனால் 2019 அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவரை அப்போதைய கேப்டன் விராட் கோலி துவக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்த ரோஹித் சர்மா சதமடித்து இப்போது முதல் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மாற்றும் ரவி சாஸ்திரி தமக்கு மறுபிறப்பை போன்ற 2வது வாய்ப்பை கொடுத்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைக் கொடுத்த ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்”

- Advertisement -

கோலி, சாஸ்திரிக்கு நன்றி:

“என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலே விளையாட வைத்தது எளிதான முடிவல்ல. அவர்கள் என்னை நம்பினார்கள். அவர்கள் என்னை ஒரு பயிற்சி போட்டியில் விளையாடுமாறு சொன்னார்கள். அதில் நான் முதல் பந்திலேயே டக் அவுட்டானேன். ஆனால் அடுத்த வாய்ப்பை பிடிப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்று நான் உணர்ந்தேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இரண்டாவது பிறப்பை போன்ற உணர்வைக் கொடுத்தது”

இதையும் படிங்க: கம்’பால் தெரியுமா? இங்கிலாந்தின் பேஸ்பாலை இந்தியா காப்பி அடிக்கிறாங்க.. மைக்கேல் வாகனுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் பதிலடி

“ஓப்பனிங் அல்லது 5, 6 உட்பட எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் வாய்ப்பை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காமல் என்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுவேன் என்பதை அவர்களுக்கு நான் காட்டினேன். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் முதல் பந்தில் அடிக்க விரும்பினேன். அதற்கான சுதந்திரத்தை அவர்கள் எனக்குக் கொடுத்தனர். 2015லயே ரவி பாய் என்னை ஓப்பனராக களமிறக்க விரும்பினார். இருப்பினும் அந்த முடிவு என் கையில் இல்லை” என்று கூறினார்.

Advertisement