கம்’பால் தெரியுமா? இங்கிலாந்தின் பேஸ்பாலை இந்தியா காப்பி அடிக்கிறாங்க.. மைக்கேல் வாகனுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் பதிலடி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை என்ற 2 – 0 (2) கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி 2 நாட்களில் அதிரடியாக விளையாடிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக நான்காவது நாளில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா 34.4 ஓவரில் 285-9 ரன்களை 8.22 ரன்ரேட்டில் குவித்தது. அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 8க்கும் மேற்பட்ட ரன் ரேட்டில் பேட்டிங் செய்த முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. மேலும் வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாகவும் இந்தியா 5 உலக சாதனை படைத்தது.

- Advertisement -

பேஸ்பால் காப்பி:

அது போக ஒரு டெஸ்ட் போட்டியில் 7க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் (7.36) விளையாடிய முதல் அணியாகவும் இந்தியா உலக சாதனை படைத்தது. அத்துடன் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் (94*) அடித்த அணி என்ற இங்கிலாந்தின் (87) உலக சாதனையையும் இந்தியா தகர்த்தது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்று வாயில் சொல்லும் இங்கிலாந்தை விட இந்தியா உண்மையாக செயலில் அதிரடியாக விளையாடி சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை காப்பியடித்து இந்தியா கான்பூரில் விளையாடியதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது அற்புதமான டெஸ்ட் போட்டி என்று நான் குறிப்பிட வேண்டும். இந்தியா பேட்டிங் செய்த விதம் அற்புதம். அவர்கள் இப்போது பேஸ்பால் வீரர்களாக மாறுவதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

- Advertisement -

கெளதம் கம்பீரின் கம்பால்:

“அவர்கள் 34.4 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்தனர். அப்படியே இங்கிலாந்தை நகலெடுத்து விளையாடினர்” என்று கூறினார். அவருக்கு ப்ரெண்டன் மெக்கல்லம் கொண்டு வந்த பேஸ்பால் அணுகுமுறையை இந்தியா காப்பியடிக்கவில்லை என்று கில்கிறிஸ்ட் பதிலடி கொடுத்தார். மாறாக கௌதம் கம்பீர் இந்திய அணியில் கம்பால் எனும் அதிரடி அணுகுமுறையை கொண்டு வந்துள்ளதாக கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய நேரடியா தகுதிபெற இப்படி வழி இருக்கு – என்ன தெரியுமா?

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் ஏற்கனவே காம்பாலுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இப்போது இங்கிலாந்து கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டும்” என்று கூறினார். அதை ஏற்றுக் கொள்ளாத மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணியை இந்தியா காப்பியடிப்பதாக மீண்டும் தெரிவித்தார். இது பற்றி அவர் “எப்படியிருந்தாலும் காம்பால் எனக்கு பேஸ்பால் போலவே தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement