ஐபிஎல்…கோலி,தோனியின் விக்கெட் தான் எனது முக்கிய இலக்கு – இளம் சுழற்பந்து வீச்சாளர் சூளுரை !

Kuldeep
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். தனது திறமையான ரிவிஸ்ட் ஸ்பின்னால் எதிரணியினரை திணறடிக்க செய்து பல காலங்களாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னனி பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை ஓரம்கட்டி அணியில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இவருக்கு வலுசேர்க்கும் விதமாக மற்றொரு இளம் சுழற்பந்து வீச்சாளராக சாஹல் உள்ளார். சமீபகாலமாக இவர்கள் இருவரது பந்துவீச்சில் எதிரணிகள் சீட்டுக்கட்டை போல மளமளவென சரிவதை பாத்திருப்போம்.நடந்து முடிந்த முத்தரப்பு தொடரிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ள குல்தீப் இந்த ஐபிஎல்-இல் முக்கியமாக யார் யார் விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என்று தன்னிடம் ஒரு பெரிய லிஸ்ட் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

viratkohli

இதுகுறித்து பேசிய அவர் “பொதுவாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கான தொடர் என்பார்கள். அதில் பந்துவீச்சாளர்கள் ஜொலிப்பது சற்று கடினம் தான். இருந்தாலும் அனைத்து வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்திட கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாக தான் நான் ஐபிஎல்-ஐ பார்க்கின்றேன். கடந்தாண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரை விட இந்தாண்டு ஆர்வமுடன் காத்திருக்கின்றேன்.

- Advertisement -

சர்வதேச போட்டிகளில் ஒரே அணியில் விளையாடிடும் வீரர்கள் ஐபிஎல்-இல் வெவ்வேறு அணிகளில் எதிரெதிர் அணிக்காக விளையாடுகின்றோம். அப்படி விளையாடிடும் போது சர்வதேச அணியில் ஒன்றாக விளையாடிய நமது அணி வீரர்களின் விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை ஐபிஎல் தொடர் உருவாக்கி தந்துள்ளது.இந்த ஐபிஎல்-இல் தோனி,விராட்கோலி போன்ற முக்கிய வீரர்கள் உள்ளடக்கிய ஒரு பெரிய லிஸ்ட் வைத்துள்ளேன்.

kuldeep

பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கும் இவர்களுக்கு சிறப்பாக பந்துவீசி இவர்களது விக்கெட்டுகளை வீழ்த்திட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை” என்று தெரிவித்துள்ளார்.குல்தீப் யாதவ் ஏற்கனவே கடந்த இரண்டு சீசன்களில் மொத்தம் 15 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement