மும்பையில் 8 ஏக்கர் பரப்பளவில் சொகுசு வில்லாவை கட்டியுள்ள கோலி அனுஷ்கா தம்பதி – வீட்டிற்குள் இத்தனை வசதிகளா?

Anushka-Sharma
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை இந்திய அணியில் தொடர்ச்சியாக நட்சத்திர அந்தஸ்த்துடன் விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட்டில் முறியடித்து வரும் விராட் கோலி அவருக்கென்று தனி மைல்கல்லை கிரிக்கெட் உலகில் பதிவு செய்து வருகிறார். தற்போது 34 வயதை எட்டியுள்ள விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பிறகே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Virat-Kohli

அப்படி விராட் கோலி ஓய்வு பெறும் முன்னரே தற்போதே அவரை பலரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை பல ஆண்டுகள் காதலித்து அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் வாமிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

- Advertisement -

இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் செல்வாக்குடைய ஜோடியாக பார்க்கப்படும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கும் இவ்வேளையில் தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவும் மும்பை கடற்கரை பகுதியான அலிபாக்கில் பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள் ஆகியோர் வசித்து வரும் ஏரியாவில் 8 ஏக்கர் நிலத்தை இந்திய மதிப்பில் சுமார் 19.25 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

Anushka Sharma 1

அந்த நிலத்தில் மேலும் 13 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமான அழகிய வில்லா ஒன்றினை கட்டியுள்ளனர். இப்படி சுமார் 34 கோடி வரை செலவு செய்து இவர்கள் கட்டியுள்ள இந்த வில்லாவில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பற்றிய விவரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி அவரது கனவு வில்லாவை தற்போது வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார். 8 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டில் மொத்தம் நான்கு பெரிய பெட்ரூம் நல்ல காற்றோட்டத்துடன் அமைந்துள்ளது. அதேபோன்று இந்த வில்லாவில் கார்களை நிறுத்துவதற்கு மட்டுமே இரண்டு தனி கேரேஜ் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நான்கு ஓய்வறைகள் உள்ளன.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டாரோ? சூரியகுமார் மீது ரசிகர்கள் அதிருப்தியடையும் புள்ளிவிவரம் இதோ

இரவு நேரத்தில் கடலை பார்த்துக் கொண்டே சாப்பிடும் வகையில் அவுட்டோர் டைனிங், நீச்சல் குளம், ஓபன் ஸ்பேஸ், உடற்பயிற்சி கூடம், பணியாளர்களுக்கு என தனி குவாட்ரஸ், தோட்டம் மற்றும் வாக்கிங் செய்ய வசதியுடன் கூடிய பார்க் என பலவற்றையும் கோலி அந்த இடத்தில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement