ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டாரோ? சூரியகுமார் மீது ரசிகர்கள் அதிருப்தியடையும் புள்ளிவிவரம் இதோ

Suryakumar-Yadav-1
- Advertisement -

நியூசிலாந்துக்கு பயணித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி அடுத்ததாக சிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலையில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆக்லாந்து நகரில் இருக்கும் ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306/5 ரன்கள் குவித்து அசத்தியது.

சமீபத்திய ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகிய ஓப்பனிங் ஜோடி இப்போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 23.1 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் கொடுத்தது. அதில் சுப்மன் கில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (65) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் கேப்டன் தவான் 13 பவுண்டரியுடன் 72 (77) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சரிப்பட்டு வரமாட்டோரோ:

அப்போது வந்து ரிசப் பண்ட் வழக்கம் போல பொறுப்பின்றி 15 (23) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 4 (3) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் திடீரென 160/4 என தடுமாறி இந்தியாவை ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 5வது 94 ரன்கள் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் 4 பவுண்டரியுடன் 36 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் கடைசி ஓவரில் 80 ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 3 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்க விட்ட தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து காப்பாற்றினார்.

முன்னதாக இப்போட்டியில் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் எடுத்த இந்தியா 350 ரன்களை அடிக்கும் தொடக்கத்தை பெற்றாலும் மிடில் ஓவர்களில் ரிஷப் பண்ட், சூரியகுமார் ஆகியோரது சொதப்பலால் தவற விட்டது. அதில் ரிஷப் பண்ட் சொதப்புவதில் ஆச்சரியமில்லை ஆனால் தற்சமயத்தில் முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் சொதப்பியது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் பெரும்பாலான போட்டிகளில் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து வரும் அவர் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். குறிப்பாக சமீபத்திய டி20 உலக கோப்பையிலும் இந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் மிரட்டிய அவர் உலக அளவில் தற்சமயத்தில் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மனாக தன்னை நிரூபித்து வருகிறார்.

மேலும் இந்தியாவின் மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் என்று அனைவரும் கொண்டாடும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 13 இன்னிங்ஸில் 344 ரன்களை 31.27 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடைசி 7 இன்னிங்ஸில் முறையே அவர் 6, 27, 16, 13, 9, 8, 4 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் மோசம் என்று சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால் தற்சமயத்தில் உச்சகட்ட முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இப்போது அடிக்கவில்லை என்றால் வேறு எப்போது அடிப்பார் என்பதே கேள்வியாகும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு மத்தியில் இப்போது முதல் அடிக்கத் துவங்கினால் தான் 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் போட்டியின்றி இடம் பிடிக்க முடியும்.

இதையும் படிங்க : வீடியோ : தெறிக்கவிடும் பினிஷிங் செய்த வாஷிங்டன் சுந்தர் – ரெய்னா, சேவாக், யுவியை முந்தி படைத்த வரலாற்று சாதனை இதோ

இதனால் ஒருவேளை பொறுமையாக விளையாடும் பக்குவம் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டாரோ என்று கணிசமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

Advertisement