இந்திய அணியில் உனக்கு இடம் உறுதி. சாப்பாட்டை மட்டும் கொறச்சிக்கோ – இளம்வீரருக்கு உறுதி அளித்த கோலி

Kohli-4

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் இளம் வீரர்கள் பெரிதாக சாதித்து வருகின்றனர். தோனி விராட், கோலி ,ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் கூட பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் பல இளம் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Ishan-kishan

அந்த வகையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கில், அகர்வால், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், தங்கராசு நடராஜன் போன்ற வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நாங்களும் இந்திய அணிக்கு தேர்வாக தயாராக இருக்கும் வீரர்கள்தான் என்று நிரூபித்து வருகின்றனர்.

அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 3 ஆவது வீரராக களமிறங்கி வரும் சஞ்சு சாம்சன் அற்புதமாக விளையாடி வருகிறார். அதிலும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்ட சாம்சன் பதிமூன்று வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். 18 வயதில் இருந்தே அனைத்தும் தொழில் முறை போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல் தொடருக்காக முதன் முதலில் கொல்கத்தா அணிக்கு தேர்வான இவர் தொடர்ந்து டெல்லி அணி அதன் பின்னர் ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே இவரது திறமையை முதலில் உலகத்திற்கு காட்டியது. ஏற்கனவே இந்திய அணிக்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான இவர் வெகு சீக்கிரத்தில் இந்திய அணியின் நிரந்தர உறுப்பினராக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்காக அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகியும் நிரந்தர இடமின்றி தவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடினார். இந்நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் அவரிடம் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தன்னிடம் ஒரு மிகப்பெரிய விஷயத்தை கூறியதாக தற்போது கூறியுள்ளார்.

Samson

இதுகுறித்து அவர் கூறுகையில் : நீ கேரளாவில் நினைக்கும் ஆறு சுவையான உணவுகளை அடுத்த பத்து வருடத்திற்கு சாப்பிடாதே. தேசத்திற்காக உன்னை அர்ப்பணித்திக்கொள். உன்னிடம் என்னென்ன இருக்கிறதோ அதை அனைத்தையும் கிரிக்கெட்டுக்காக கொடுத்துவிடு உனக்கு பிடித்த உணவுகளை இனிமேல் சாப்பிட்டாதே 10 வருடம் கழித்து உனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டுக்கொள்.

samson

கிரிக்கெட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட நீ இனி தேசிய அணிக்காக விளையாட தயாராக இருக்கவேண்டும். அதன்படி முழு அர்ப்பணிப்புடன் நடந்து கொள்ளும் படியும் அடுத்த பத்து வருடத்திற்கு நீ இந்திய அணிக்காக ஆடப் போகிறாய் என்று விராட் கோலி தன்னிடம் கூறியதாக கூறியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.