- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவர் வெறும் பேட்ஸ்மேன் இல்ல – சேஸ் மாஸ்டர், மாஸ் பினிஷர், மிரள வைக்கும் கிங் கோலியின் சாதனை புள்ளிவிவரம்

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த வெற்றியையும் அதை சாத்தியமாக்கிய விராட் கோலியின் ஆட்டத்தையும் மறக்க முடியாமல் இன்னும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஏனெனில் உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றினர்.

அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் கதை முடிந்ததாக இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது நான் இருக்கிறேன் என்ற வகையில் நங்கூரமாக நின்ற விராட் கோலி சக வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

குறிப்பாக 12வது ஓவரில் மட்டும் 20 ரன்களை குவித்து திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த ஜோடியில் அதிரடி காட்ட முடியாமல் பாண்டியா தவித்த போது ஆகாய சூரன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட விராட் கோலி 150 கி.மீ வேகத்தில் வீசும் அதிரடி சூரன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் 2 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு தன்னை கிங் என்பதை நிரூபித்தார். அதிலும் அந்த ஓவரின் 5வது பந்தில் பின்னங்காலில் நின்று நேராக பறக்க விட்ட அசால்டான சிக்ஸர் சச்சின் டெண்டுல்கர் முதல் கௌதம் கம்பீர் வரை குருவையும் எதிரியையும் கைதட்டி பாராட்ட வைத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.

மாஸ்டர் பினிஷர்:
அத்துடன் கடைசி ஓவரில் பாண்டியா அவுட்டான பின் தினேஷ் கார்த்திக் சொதப்பிய பின் நோ பாலை வீணடிக்காமல் கச்சிதமாக சிக்ஸர் அடித்த அவர் அஷ்வினுடன் இணைந்து பெற்றுக் கொடுத்த வெற்றி உண்மையாகவே அசாத்தியமானது. 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்களை விளாசி வெற்றி பெற வைத்த அவர் கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானை பழி தீர்க்க உதவினார். அப்படிப்பட்ட அவரது ஆட்டம் ஆட்டநாயகன் விருதையும் தாண்டிய விலைமதிப்பற்றது என்றே கூறலாம்.

- Advertisement -

பொதுவாக விராட் கோலி 3வது விளையாடுவதால் அவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அவர் டி20 வரலாற்றின் மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் என்பதையும் சிறந்த பினிசர் என்பதையும் சொல்லும் புள்ளிவிவரத்தை பற்றி பார்ப்போம்.

1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்த 45 இன்னிங்சில் 1983 ரன்களை 73.44 என்று அபாரமான சராசரியில் 136.47 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள விராட் கோலி 20 அரை சதங்களையும் 169 பவுண்டரிகளையும் 53 சிக்சர்களையும் அடித்துள்ளார். இது உலகிலேயே அதிக பட்சமாகும். 2வது இடத்தில் பால் ஸ்டெர்லிங் : 1805 ரன்கள்

- Advertisement -

2. அதைவிட வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 36 இன்னிங்சில் 16 அரை சதங்கள் 132 பவுண்டரிகள் 45 சிக்ஸர்கள் உட்பட 1621 ரன்களை 90.05 என்ற அற்புதமான சராசரியில் 135 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் விராட் கோலி எடுத்துள்ளார். இதுவும் உலகிலேயே அதிக பட்சமாகும். இதில் மிரளவைக்கும் ஆச்சரியம் என்னவெனில் அந்த 36 இன்னிங்களில் 18 இன்னிங்சில் கடைசி வரை விராட் கோலி அவுட்டாகாமல் இருந்துள்ளார். அந்த 18 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அப்படியானால் அந்த 18 போட்டிகளிலும் வெற்றிகரமாக பினிசிங் செய்துள்ளார் என்பதிலிருந்தே அவர் ஒரு மிகச்சிறந்த கொண்டாடப்படாத பினிஷர் என்பதும் நிரூபணமாகிறது.

இதையும் படிங்க : வேறு வழியின்றி அரை மனதுடன் விராட் கோலியை பாராட்டிய கெளதம் கம்பீர் – பேசியது இதோ

3. அத்துடன் டி20 உலக கோப்பையில் இதுவரை சேசிங் செய்த 10 இன்னிங்சில் 7 அரை சதங்கள் உட்பட 541 ரன்களை 270.50 என்ற இமாலய சராசரியிலும் 135.92 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் விராட் கோலி எடுத்துள்ளார். இது உலகில் 2வது பட்சமாகும். முதலிடத்தில் டேவிட் வார்னர் 543 ரன்களுடன் உள்ளார். ஆனால் அவருடைய சராசரி வெறும் 30.16 ஆகும்.

4. மேலும் டி20 உலக கோப்பையில் வெற்றிகரமாக சேசிங் செய்த போட்டிகளில் விராட் கோலி மட்டும் 7 அரை சதங்கள் அடித்துள்ளார். ஆனால் எஞ்சிய அனைத்து இந்திய வீரர்களும் சேர்ந்து 6 மட்டுமே அடித்துள்ளனர். இப்படி நிறைய புள்ளிவிவரங்கள் விராட் கோலி என்பவர் வெறும் பேட்ஸ்மேன் அல்ல மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் என்பதையும் சிறந்த பினிசர் என்பதையும் நிரூபிக்கிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by