Virat Kohli : உண்மையிலே உங்களுக்கு பெரிய மனசு கோலி – நெகிழ்ந்த ஸ்மித்

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய

Kohli-Smith
- Advertisement -

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இந்த தொடரில் இது இரண்டாவது வெற்றியாகும்.

Smith-1

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி லைன் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை பார்த்து சீட்டர் சீட்டர் என்று கத்தினர். சீட்டர் என்றால் ஏமாற்றுக்காரன் என்று அர்த்தம். ஸ்மித்தை ஏமாற்றுக்காரன் என்ற விதத்தில் இந்திய ரசிகர்கள் உரக்கக் கத்தினார்கள்.

- Advertisement -

இதனை கவனித்த கோலி இந்திய ரசிகர்களை பார்த்து அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி வேண்டாம் அவரை இகழ்வதை நிறுத்துங்கள் அவர் ஒரு சிறந்த வீரர் என்று கூறியவாறு கைதட்டும் தரும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டார். எனவே ரசிகர்களும் கோலியின் செய்கையை புரிந்து ஸ்மித்தை இகழ்வதை நிறுத்தி கொண்டு ஸ்மித்தை ஆதரிக்கும் விதமாக கைதட்டினார்கள்.

smith 2

இதனைக்கண்ட ஸ்மித் நெகிழ்ந்து கோலி அருகில் வந்து அவரை கட்டித்தழுவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். சென்ற ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை செய்யப்பட்ட ஸ்மித் இந்த உலக கோப்பையில் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement