தண்ணி அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது – இதெல்லாம் தேவையா?

Kambli-1
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அளவுக்கு புகழின் உச்சிக்கே செல்வார்கள். இருப்பினும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்த கதையும் உள்ளது. இருப்பினும் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தவறான பாதையில் சென்று சர்ச்சையில் சிக்கி தேவையில்லாமல் கெட்ட பெயரை வாங்கிய எத்தனையோ கதையை பார்த்துள்ளோம்.

Kambli

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி குடித்துவிட்டு மது போதையில் ரகளை செய்து போலீசாரால் கைதாகிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவிற்காக 90களில் விளையாடிய வினோத் காம்ப்ளி 104 ஒருநாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வினோத் காம்ப்ளி:
குறிப்பாக கிரிக்கெட் கண்ட மகத்தான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பரான இவர் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருடன் பார்ட்னெர்ஷிப் அமைத்து சாதனை படைத்தவர். அதன் காரணமாக காலப்போக்கில் இந்தியாவிற்கும் அவருடன் இணைந்து விளையாடிய பெருமையும் பெற்றவர்.

kambli

இதனால் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2477 ரன்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1084 ரன்களைக் குவித்துள்ளார். இருப்பினும் பெரிய அளவில் விளையாட தவறிய இவர் காலப்போக்கில் இந்திய அணியில் இருந்து காணாமல் போய் அதன்பின் அரசியலில் ஈடுபட்டு ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்த பின் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இப்போதும் கூட இவருடன் நெருங்கிப் பழகி வரும் சச்சின் டெண்டுல்கர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவருடன் ஏதாவது சேட்டையில் ஈடுபடுவது போன்ற வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

மதுபோதையில் ரகளை:
இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் இவர் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது அருந்திவிட்டு வேகமாக தனது காரை இயக்கியதாக தெரிகிறது. ஆனால் கண்முன் தெரியாமல் குடித்த அவர் போதையில் தாறுமாறாக தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று தனது குடியிருப்பு பகுதியின் நுழைவு வாயிலை இடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. அத்துடன் அதை தட்டிக் கேட்ட அந்த குடியிருப்பின் காவலாளி மற்றும் அங்கே இருந்த ஒரு சில குடியிருப்பு வாசிகளிடம் அவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுப்பாகி பாந்திரா காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதை அறிந்து உடனே களத்தில் இறங்கிய அந்த பகுதியை சேர்ந்த காவல் அதிகாரிகள் உடனடியாக போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த வினோத் காம்ப்ளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். இது காவல் நிலையத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தனது வழக்கறிஞரை தொடர்பு கொண்டு அதன் பின் ஒரு வழியாக பெயில் எடுத்து தற்போது வெளியே வந்துள்ளதாக பாந்திரா காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

கெட்ட பெயர் எதற்கு:
இருப்பினும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி மக்களின் பாதுகாப்புக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது போன்ற பிரிவின் கீழ் வினோத் காம்ப்ளி மீது காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி நல்ல பெயரைப் பெற்றுள்ள இவர் இப்படி குடிபோதையில் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டு காவல் நிலையம் வரை சென்று வந்ததை அறிந்த ரசிகர்கள் தேவையில்லாமல் இந்த கெட்ட பெயர் எதற்கு என்று அவரை தங்களின் சமூக வலைதளங்களில் சாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க : இப்படி பண்றவங்க எல்லாம் உண்மையான இந்தியராகவே இருக்க முடியாது – முகமது ஷமி ஆவேசம்

இவர் ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு சைபர் குற்றத்தில் சிக்கினார். அதாவது கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதியன்று ஒரு வங்கியின் வாடிக்கையாளரிடம் கேஒய்சி சம்மந்தமாக விவரம் கேட்பது போல் பேசி அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 1.14 திருடப்பட்டதாக பாந்திரா காவல்நிலையத்தில் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் வினோத் காம்ப்ளி சிக்கியது பின்னர் வெளிவந்தது.

Advertisement